கதைகள் கடிதங்கள்

மூத்தவருக்கு

வணக்கம். ஒவ்வொரு நாளும் வலையற்றப் படும் பதிவுகளுக்குக்  காத்திருக்கையில் “முந்தைய பதிவுகள்” கொடுக்கும் இணைப்புகளை மறுவாசிப்பு செய்வது வழக்கம். இன்று நான்

நுழைந்தது ஏகம் கதையில். 5 பேர் ஒன்றாகும் ஒரு ஊர்தி அதைத்  தொடர்புறுத்தும் ஒரு ஆன்மீகக் கதை, இருவர் ஒன்றாகும் திருமணம், கடைசியில் ஜேகேயும் மணியும் ஒன்றாகும் ஒரு கவித்துவ உச்சம் என கதை ஒரு ஆற்றொழுக்கு. அந்த கவித்துவ உச்சத்தின் மேலமர்ந்து வரும் கடைசி 4, 5 வரிகள்கதையை மற்றொரு தளத்திற்குக் கொண்டு செல்கின்றன.

திருமணம் என்ற இணைப்பு நம்பிக்கையின்மையை அடித்தளமாகக்  கொண்ட செயல் எனும் ராகவன், ஜேகே யும் மணியும் பகிர்ந்து  கொண்ட தனிமையை உணர்ந்து கண்ணீர் துளிர்க்கிறார்.திருமணம் ஒரு தெய்வீக நிகழ்வு  என்ற ரீதியில் அணுகும் கோபாலன்,  ராகவனின் கண்ணீரையோஅவர் உணர்வு நிலையையோ புரிந்து கொள்ள இயலாமல் ஏன் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அழகான பின்னல்.

அன்புடன்

இரா. தேவர்பிரான்

***

அன்புள்ள தேவர்பிரான்

ஒர் உலகியல் சூழலில் ஒருவர் ஒரு படி மேலே நின்றிருக்கிறார். அவருடைய நோக்கு வேறொன்றை அதில் பார்க்கிறது. அத்தகையவர்களை நாம் உணரும் சில தருணங்கள் உண்டு.

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் ,

உங்களுடைய நெடுந்தூரம் சிறுகதையை வாசித்தேன். என்னை சிந்திக்க வைத்த கதை .நாம் வாழும் சமூகத்தின் மற்றோரு பக்கத்தை காட்டும் கதாபாத்திரங்கள். அதே டில்லி அன்று கிழியாத சட்டையும் சீவிய தலையுமாக அங்கு சென்றிருந்தால் அந்த காவலர்களிடம் அகப்பட்டிருக்க மாட்டான் .மற்றோரு பக்கம் அவ்விரண்டு கழுகுகள் ,பல நாட்களாக பசியில் இருந்தும் கூட அந்த சடலத்தை சாப்பிடவில்லை .

வலச்சரின் சிறகுகளை போலவே அழுக்கான சட்டை ,கழுகை போன்ற நிழல் மனிதர்களுக்கு மட்டும் அல்ல அவற்றிற்கும் கூட கழுகாகவே தோன்றியிருக்கலாம். தோற்றத்தில் மட்டுமல்ல அந்த ஒற்றுமை தனக்கு சாகும் நிலைஏற்பட்டாலும் கூட தனது இரையை தேடிக்கொள்ள தெரியாத கழுகுகள் .தனக்கு தெரிந்த தொழில் இல்லையென்றால் மற்றோரு தொழிலை தேடாமல் ஒருவருடையஉதவியை நாடும் மனிதர்கள் .இதில் யார் யாருடைய பிரதிபலிப்பு ?

நன்றி !

அன்புடன் ,

தீபிகா .

***

அன்புள்ள தீபிகா

நெடுந்தூரம் என்பது கழுகுகள் செல்லும் உயரத்திற்கும் மனிதனுக்குமான தூரம் என அப்போது எண்ணிக்கொண்டேன். அங்கே செல்லமுடியாதபடி மனிதன் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கிறான். ஆனால் ஏதோ ஒருவழியில் அவனால் அதை உணரவும் முடிகிறது

அன்புடன்

ஜெ

***

வான் நெசவு

குமரித்துறைவி

இரு கலைஞர்கள்

பொலிவதும் கலைவதும்

தங்கப்புத்தகம்

ஆயிரம் ஊற்றுகள்

முந்தைய கட்டுரைமுதற்கனல் வாசிப்பு
அடுத்த கட்டுரைஇமையத்தின் கோவேறு கழுதைகள், வெங்கி