வெண்முரசின் உணவுகள்- கடிதம்

ஓவியம்: ஷண்முகவேல்

வணக்கம்.

சித்திரை பவுர்ணமி அன்று காணொழி மூலம் தங்களை காண வாயப்பு கிடைத்தத. அந்த இரவு  என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரவாகும். 11.30. முதல 1:40 வரை இணைந்திருந்தேன். நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை, அமைதியாக தங்களுடைய உரையாடலை கவனித்துக் கொடிருந்தேன். ஓர் இனிய இரவாக இருந்தது.

குமரித்துறைவி பற்றி பலர் கேட்டனர், நானும் உங்களிடம் ஓர் விடயத்தை  கேட்கலாம் என்று இருந்தேன் ஆனால் சற்று அமைதியாக இருக்க மூளை ஆணையிட்டது.

வெண்முரசில் நீங்கள் பல நில வர்ணைனைகளையும தத்துவங்களைப் பற்றியும் வந்து கொண்டே இருக்கிறது, அதற்கு நிகராக உணவைப் பற்றியும் வருகிறது எப்படி அத்தனை வகை உணவுகளைப் பற்றி தெரிந்து கெண்டீர்கள், உங்கள் வலை தலத்திலும் பல உணவு வகையைப் பற்றிய குறிப்புகளும் கதைகளும் உள்ளன அவற்றை பற்றி கூறுங்கள்

உங்கள் வலைதலத்தில இயன்ற வரை தேடிக் கொண்டிருக்கிறேன் இது வரை கிட்டவில்லை.(நேரம் இருந்தால் சற்று விடை அளிக்கவும், ஒரு உணவு பிரியனின் ஆசை)

நீலம் நாவலை வாசித்து முடித்துவிட்டேன். பிரயாகை நாவலை படித்து கொண்டிருக்கிறேன். நான் வெண்முரசு ரீடரில் நாவல்களை வாசித்து வந்தேன், கடிதங்களை நீலதிற்கு முன்பு வாசித்ததில்லை நீலம் வாசித்த பின்பு ஒவ்வொரு கடிதமாய் வசிக்கிறேன. புதிய வாசல்கள். திறந்து கொண்டே இருக்கிறது.

படித்து முடித்தவுடன் என் டைரியில் எழுதினேன். அதை படித்து பார்த்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது. அதை பிற கடி தங்கள லுடன் ஒப்பிடும்போது நான் எங்கிருக்கிறேன்  என்று உணர்கிறேன். சற்று அந்தரங்கமான ஒரு குறிப்பாக இருந்தது பொது தன்மை இல்லாமல் இருந்தது. கிட்ட தட்ட இரண்டு மாதமாய் நீலத்தையே படித்தேன். வேறு. எதுவும் சொல்ல என்னால் இயல வில்லை அல்லது என்னுடைய அனுபவத்திற்கு மேல் உள்ளது நீலம்.it is larger than my life .ஒருவேளை காதலித்தால் அந்த நிலை புரியலாம்.

இப்பொழுது ரீடரில் வாசிக்காமல் நாள் வரிசையில் வாசிக்கிறேன், அந்தந்த பதிவிற்கான எடிர்வினையுடன் விரித்து வாசிக்கிறேன். துறுவனின் கடையை கேட்டு அன்று மொட்டைமாடியில் நின்று கடும் முயற்சி செய்து துறுவனை பாக முயற்சி செய்தேன் முடிய வில்லை. மேகமூட்டம் இருந்ததாலும் நிலவினாலும் பர்க முடியவில்லை, தினமும் முயற்சி செய்கிறேன், அமாவாசை அன்று பார்த்து விடுவேன் என்று நினைக்கிறேன்.

மற்றொரு சிறு சந்தேகம்.தங்கள் வலை தளம் மூலமாக காந்தி today வலைதளம் எங்கு அறிமுகமானது அதிலும் தினமும் சென்று படிப்பேன், ஆனால் சென்ற மூன்று வாரமாக அந்த இணைய தளம் error என்று வருகிறது திரக்க முடிய வில்லை என்ன என்று தெரிய வில்லை.  இதை தங்கள் பார்வைக்கு கொண்டுவரவே எழுதுகிறேன்.

தங்களின் நேரத்தை சற்று அதிகமாக எடுத்து கொண்டதற்கு மன்னிக்கவும்.

அன்புடன்

சோழராஜா

***

அன்புள்ள சோழராஜா

ஒரு நாவலில் வரும் செய்திகள் திட்டமிட்டுச் சேர்ப்பவை அல்ல. திட்டமிட்டு ஆராய்ச்சி செய்து சேர்க்கும் செய்திகளும் ஏராளமாக உண்டு. ஆனால் நுண்செய்திகள் வாழ்க்கை முழுக்க அறியாமலேயே உள்ளே சென்று நனவிலியில் சேர்ந்துகொண்டிருப்பவை. அவை அங்கிருப்பதையே நாம் அறிவதில்லை. புனைவு உருவாகும் உளஎழுச்சியின்போது அவை அறியாமலேயே வந்து நிறைகின்றன. படைப்புத்திறன் என்பது அசாதாரணமாக விரியும் நினைவுத்திறன், மொழியில் உருவாக்கிக் கொள்ளும் கனவு.

கனவில் நாம் அறிந்தே இராத நிலங்களும் உணவுகளும் வருகின்றன இல்லையா? அவற்றை நாம் எங்கோ கண்டிருப்போம். மறந்திருப்போம். அல்லது ஒன்றைக் கண்டு இன்னொன்றென கற்பனையில் விரித்திருப்போம். கனவில் அவை எப்படி இணைகின்றன, எப்படி தர்க்கபூர்வமாக ஒருமைகொள்கின்றன என்று கண்டடைவது கடினம். அப்படித்தான் இலக்கியம் எழுதப்படும் கணத்திலும் நிகழ்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைநவீன இலக்கியம் வரையறை
அடுத்த கட்டுரைகி.ரா.உரை- கடிதம்.