அஞ்சலி ,நாகேஷ்

நாகேஷ் எப்படி சிரிக்க வைக்கிறார்? வேகம் மூலம் என்று சின்னவயதிலேயே ஓர் எண்ணம். வேகமான தருணங்களில் நிகழும் அபத்தங்களை, திருப்பங்களை, மின்னல்களை அவர் சட் சடென்ன்று காட்டுகிறார். இது ஒரு குறுக்கல்பார்வையாக இருக்கலாம். ஆனால் இப்படிப்பார்க்கும்போது அவரது பல சாத்தியங்கள் கண்ணில் படுகின்றன.

 

எதையோ குழிதோண்டிப்புதைத்து வைத்துவிட்டார். இடம் மறந்துவிட்டது. பதற்றமும் அழுகையுமாக தோண்டுகிறார். தோண்டிச்செல்லும்போது ஒரு மண்டையோடு சிக்குகிறது. அதை சரியாகப் பார்க்காமலேயே எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு மீண்டும் தேடுகிறார். கிடைக்கவில்லை. அழுகையும் ஆவேசமுமாகப் புலம்புகிறார் எங்க வச்சேனோ பாவி மட்ட எடம் மறந்துபோச்சே…சட்டென்று திரும்பி மண்டை ஓட்டிடம் ”…இதில சிரிப்பு வேறஉடனே அதைக் கவனித்து ஆ என்று ஓர் அலறல்.

 

 

நகேஷின் வேகம் எதிர்வினைகளில்தான் இருக்கிறது. என்னிடம் வா நான் பார்த்துக்கொள்கிறேன்” ”எங்கெங்க வீங்கியிருக்குன்னா?” என்ற திருவிளையாடல் வசனம். அதைப்போல அவரே பேசுவார் என்றார் யூகி சேது. பஞ்ச தந்திரம் படத்தில் நாகேஷ¤ம் யூகியும் பேசுகிறார்கள். பிணத்தை ஆற்றில் போடுவதற்காக நாகேஷை அப்பால் நகட்டிச்செல்ல முயல்கிறார்கள். ”…அவரோட போய் மூச்சா அடிங்க” ”அறுபது வருஷமா தனியாத்தானே போறேன்” ”இல்ல இவரு புடிச்சுக்குவார்” ”புடிச்சு என்ன செய்யப்போறான்?” என்று இருவரும் மேலும் இருபது வசனம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். சிரித்து ஓடிப்போன கெ.எஸ். ரவிக்குமார் பிறகுதான் கட் சொன்னாராம்.

 

 

 

துரத்தும் வில்லனிடமிருந்து ஒளிய கண்டதையெல்லாம் திறக்கும் நாகேஷ் அவசரத்தில் கூஜாவையும் திறந்து பார்ப்பார். மனித வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது என்பதைத்தான் எல்லா நகைச்சுவை நடிகர்களும் காட்டுகிறார்கள். அவ்வகையில் அவர்கள் ஞானிகள்.

 

 

நாகேஷ¤க்கு அஞ்சலி

 

 

 

முந்தைய கட்டுரைநான் கடவுள்
அடுத்த கட்டுரைஇடம் ,ஒரு கேள்வி