வெண்முரசு ஆவணப்படம் – கனெக்டிகட் மற்றும் போர்ட்லாண்ட்

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம். இதுவரை ஏழு திரையரங்குகளில், வெண்முரசு ஆவணப்படம், வெளியிடப்பட்டு, வாசக நண்பர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்ற வாரத்தில், ஆவணப்படம் பார்த்த, சத்யராஜ்குமார் எனும் நண்பர், தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மதியம் வெண்முரசு ஆவணப்படம் திரையிட்ட தியேட்டருக்கு சுமார் 80 பேர் வந்திருந்தார்கள். ஒரு இலக்கிய நிகழ்வுக்கு, அதிலும் கோவிட் சமயத்தில் இவ்வளவு பெரிய கூட்டம் என்பது மகிழ்ச்சிக்குரியது” எனக் குறிப்பிட்டிருந்தார். ஆவணப்படத்தில் பேட்டிகளும், இசையும் அழுத்தமாக வந்திருக்கின்றன என்ற பாராட்டுடன்,  அதன் தாக்கத்தை வெளியிட, Jermantown Rd, என்பதை ஜெயமோகன் ரோடு என்று வாசித்ததாக சொல்லியிருந்தார்.

அடுத்து திரையிடவிருக்கும் இரு நகரங்களின் விபரங்கள் கீழே.

ஹார்ட்போர்டு,  கனெக்டிகட்:

ஜுன் 27 2021 –  ஞாயிற்றுக்கிழமை – 3:00 PM

Apple cinemas waterbury

920 Wolcott St, Waterbury, CT 06705

தொடர்புக்கு –  பாஸ்டன் பாலா,  bsubra@gmail,com, Phone – 978-710-9160

போர்ட்லாண்ட், ஓரேகன் :

ஆகஸ்ட் 7, சனிக்கிழமை – 5.00 PM to 7.00 PM

Clinton Street Theater,

2522 SE Clinton St, Portland, OR 97202

தொடர்புக்கு : பிரபு, [email protected] Phone – 971-717-4223

வெண்முரசு ஆவணப்படத்தைப் பற்றிய பொதுவான விபரங்களுக்கு, [email protected]-க்கு தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

முந்தைய கட்டுரைஅஞ்சலி: எஸ்.ரமேசன் நாயர்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 15