எழுத்தாளர் படங்கள்

எழுத்தாளர் படங்கள்-கடிதம்

எழுத்தாளர் முகங்கள்.

வணக்கம் ஜெயமோகன்‌,

நான் அழியாச்சுடர்கள் ராம்.

நான் எனது அழியாச்சுடர்கள் பேஸ்புக் பக்கத்தில் ( https://m.facebook.com/azhiyasudar ) எழுத்தாளர்கள்களின் பழைய புகைப்படங்களை ரீஸ்டோர் செய்து வெளியிட்டு வருகிறேன்.

இந்த ஒருமாதம் ஊரடங்கை கடக்க இதை விளையாட்டாக ஆரம்பித்தேன்.  ஒவ்வொரு புகைப்படமும் உருமாறி வருவதை பார்க்க மகிழ்ச்சியும் உத்வேகமும் கிடைத்து கிட்டத்தட்ட 60 புகைப்படங்கள் ரீஸ்டோர் செய்துள்ளேன்.

கருப்பு தாடி விக்ரமாதித்யன், தேவதேவன்,நீல பத்மநாபன்,தாடியில்லாத தஞ்சை பிரகாஷ்,மீசையில்லாத ஜெயகாந்தன்,தாடியுடன் திலீப்குமார்.

உங்கள் இரண்டு புகைப்படங்களையும் இணைத்துள்ளேன்.

நன்றி

அன்புடன்

ராம் பிரசாத்

அன்புள்ள ராம்

உண்மையில் மிக ந்ல்ல முயற்சி.

நான் எப்போதுமே எழுத்தாளர்களுடன் அவர்களின் படங்களை இணைப்பதுண்டு. இளம் எழுத்தாளர்களுக்குக் கூட முகம் முக்கியமானது. அதுதான் அவர்களின் அத்தனை கதைகளையும் ஒன்றாக ஒரு கோட்டில் தொகுக்கிறது. அவர்களைப் பற்றிய மதிப்பீட்டை வாசகனிடம் உருவாக்குகிறது. அவர்களுடன் உரையாடும் உணர்வை வாசகர்கள் அடையச்செய்கிறது

[ ஆனால் இணையதளத்தின் ‘டேட்டாச் சுமை’ கருதி படங்கள் பெரும்பாலும் தொகுப்பிலிருந்தே எடுக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்]

தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் புகைப்படங்களே இல்லை. இணையத்தில் படங்கள் கிடைப்பது அரிதினும் அரிது.பெரும்பாலும் கருப்புவெள்ளைப்படங்கள். வண்ணம் மாற்றப்பட்ட படங்கள் இதழ்களுக்கு மிக உதவியானவை.

தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களின் வாரிசுகளையும் சந்தித்து புகைப்படங்களைச் சேகரித்து இணையத்தில் ஏற்ற முடியுமானால் அது ஒரு பெரும்பணியாக இருக்கும். ஏற்கனவே இதை எழுதியிருக்கிறேன். மலேசியாவில் நவீன் இந்த அரிய முயற்சியைச் செய்துகொண்டிருக்கிறார். [சடக்கு – ஒரு மகத்தான முயற்சி ]

ஜெ

முந்தைய கட்டுரைவிருதுகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநிர்வாகம்