வெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம். திட்டமிட்டபடி, ஜூன் 12 – ல் வாஷிங்டன் DC  பகுதியிலும், அட்லாண்டாவிலும், தென் கலிபோர்னியா மாநிலத்திலும், வெண்முரசு ஆவணப்படம் நல்ல முறையில் திரையிடப்பட்டு,  வாசக நண்பர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  திரையிடலை திறம்பட எடுத்து நடத்திய நண்பர்கள் விஜய் சத்யா (வாஷிங்டன்  DC  / வர்ஜீனியா), சிஜோ (அட்லாண்டா), ராஜா (அட்லாண்டா), சிவகாந்த் (அட்லாண்டா), தாமோதரன் (அட்லாண்டா), ஸ்ரீராம் (இர்வின்) அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.விஜய் சத்யா, வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடனும், சிஜோ, அட்லாண்டா தமிழ் சங்கத்துடனும், ஸ்ரீராம், socialtamil.org , araneri foundation, sangamam அமைப்புகளுடனும் இணைந்து ஏற்பாடு செய்ததன் மூலம், வெண்முரசுவின் வரலாற்றுச் சாதனையை ஒவ்வொரு அமைப்பும் அறிந்து உதவுகிறது என்பதை மகிழ்வுடன் அறிகிறோம்.

இந்த மாதத்தில் இன்னும் இரு நகரங்களில் திரையிடல் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

வளைகுடாப் பகுதி, வட கலிபோர்னியா :

ஜுன் 19,  2021 – சனிக்கிழமை – 3:00 PM

Century Theaters at Pacific Commons XD,

43917 Pacific Commons Blvd,

Fremont, , CA 94538

தொடர்புக்கு – சுதர்ஷன்,  [email protected], Phone – 209-890-5072

முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

ஹார்ட்போர்டுகனெக்டிகட்:

ஜுன் 27 2021 –  ஞாயிற்றுக்கிழமை – 3:00 PM

Apple cinemas waterbury

920 Wolcott St, Waterbury, CT 06705

தொடர்புக்கு –  பாஸ்டன் பாலா,  [email protected], Phone – 978-710-9160

ஜூலை மாதத் திரையிடலுக்கும், ஹூஸ்டன், சிகாகோ,  போர்ட்லாண்ட், நியூ மெக்ஸிகோ என வெவ்வேறு நகர்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும்,  ஒருங்கமைப்பாளர்கள் அழைத்துப் பேசி , தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். Phone keeps ringing.

வெண்முரசு ஆவணப்படத்தைப் பற்றிய பொதுவான விபரங்களுக்கு, [email protected]க்கு தொடர்பு கொள்ளவும்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) 

முந்தைய கட்டுரைபுரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் – நியூ ஜெர்ஸி அனுபவம்