பீஷ்மரும் திருதராஷ்டிரரும்

 

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.

மீண்டும் ஒரு சிறு முயற்சி. மழைப்பாடலில் எனக்குப் பிடித்த கதை மாந்தர்கள் பீஷ்மரும், திருதராஷ்டிரனும். கதையின் ஆரம்பத்தில் இருவரும் இருவேறு நிலைகளில் இருக்கின்றனர். அனைத்தையும் துறந்து செல்ல விழைபவராக பீஷ்மர் இருக்கிறார். ஆணவம் மிகுந்தவனாக, அனைத்தையும் இறுகப் பற்றிக் கொள்ள விழைபவனாக திருதராஷ்டிரன் இருக்கிறான். இருவரும் பெரு மல்லர்கள். இருவரும் சந்திக்கும் இடம் மல்யுத்த களமாக இருப்பது சிறப்பு. முடிவில் தோற்று ஆணவம் உடைந்து அனைத்தையும் இழந்து பீஷ்மரின் பாதங்களில் விழுகிறான் திருதராஷ்டிரன். அவனை ‘குழந்தை’ என அழைத்து மெய் தழுவி அதுவரை தான் துறந்தவற்றை மறந்து அவன் அன்பெனும் பிடிக்குள் வருகிறார் பீஷ்மர். வெண்முரசில் எனக்குப் பிடித்த உச்ச தருணங்களில் இதுவம் ஒன்று.

அன்புடன்

தண்டபாணி

முந்தைய கட்டுரைஇளையராஜா-கலை, மனிதன்
அடுத்த கட்டுரைஅன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்