அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (USA) தயாரித்து வெளிவந்திருக்கும் “வெண்முரசு Tribute” ஆவணப்படத்திற்காக கடந்த வருடம் அருண்மொழி அக்கா அவர்களை ஒரு சிறு பேட்டி எடுக்க வந்திருந்த போது வெண்முரசு குறித்த அவரது வாசிப்பும், உலக இலக்கியத்தில் அவரது பரவலான தேர்ச்சியும் வியக்க வைத்தன. தொடர்ந்து வெண்முரசு வாசகர்களை சந்தித்து ஆவணபடுத்தும் ஒரு நீண்ட பயண முயற்சிக்கு இந்த பேட்டி உந்துதலாக அமைந்தது. நோய்த்தொற்று காலத்தால் அந்தப் பயணத்தில் தற்போது சிறு தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அருண்மொழி அக்காவின் இந்த நீண்ட பேட்டி வெண்முரசு குறித்து புதிய வாசகர்கள் புரிந்து கொள்ளவும், ஒட்டுமொத்தமாக ஒரு பார்வையை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும். டால்ஸ்டாய், இசை, பயணங்கள் என வெவ்வேறு துறைகளில் அவருக்கு இருக்கும் புரிதலின் ஆழம் வியக்க வைத்தது.
நீண்ட பேட்டி என்பதால் இதை சோர்வில்லாமல் பார்க்கவும் நல்ல காட்சி அனுபவமாக மாற்றவும் ஷண்முகவேல் அவர்களின் ஓவியங்கள் பெரிதும் உதவின. அவரின் அனுமதியுடன் வெண்முரசுக்காக அவர் வரைந்த பல ஓவியங்கள் இதில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இதன் துவக்கத்திற்கு காரணமாய் இருந்த ஆஸ்டின் சௌந்தர் அண்ணா மற்றும் ராஜன் சோமசுந்தரம் அவர்களுக்கும் நன்றிகள். கேட்டவுடன் இதை ஒளிபரப்ப ஒப்புக்கொண்ட ஸ்ருதி டிவி கபிலன் அண்ணாவுக்கு நன்றிகள்.
இது நாளை மாலை Shruthi TV சேனலில் ஒளிபரப்பப்படும். அதற்கு ஒரு சிறிய முன்னோட்டம் தயாரித்தேன்.
ஆனந்த் குமார்