மயில்கழுத்தும் தாயார்பாதமும்- கடிதம்

அன்புள்ள ஜெ..

அறம் சிறுகதை தொகுதியில் ஒவ்வொருவருக்கும் சில கதைகள் சற்று கூடுதலாகப்பிடிக்கும்.  எனக்கு அதிகம் பிடித்த கதை மயில் கழுத்து.

இந்த கதையையும்  தாயார்பாதம் கதையையும் juxtapose செய்து பார்த்தால் கூடுதலாக சில திறப்புகள் நிகழ்வதாக தோன்றுகிறது

குரு பக்தி , தந்தை மீதான பாசம் போன்ற உயரிய அம்சங்கள் மிகப்பெரிய தீமைக்கு வழி வகுப்பதையும் , நஞ்சு என கருதப்படும் ஒன்று மேல்நிலைக்கு உயர்த்துவதையும் இக்கதைகளில் கவனிக்கிறோம்

ஒருசேரப்படிக்கும்போது நமக்கு கிடைக்கும் புரிதல் , தனியாக படிப்பதில் இருந்து சற்றே வேறுபட்டது

இப்படி இரு கதைகளை ஒப்பிட்டு வாசிப்பது சரியான வாசிப்பா ?

http://www.pichaikaaran.com/2021/05/blog-post_27.html

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

முந்தைய கட்டுரைவெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : கடிதங்கள் – 8