டேனியல் லாபெல்

மனம்
குருவும் குறும்பும்
இடுக்கண் வருங்கால்…

கம்யூட்டர் யுகத்துக் கடவுள்

இனிய ஜெயம் ,

சிறு வயது தொட்டே சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன், முதல் ஜாக்கி சான் வரை அவர்கள் நிகழ்த்திக் காட்டும் ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவைகளின் ரசிகன் நான்.  குறிப்பாக சாப்லினை கழுத்தைப் பிடித்து ஏதேனும் குண்டன் தூக்கி உலுக்கும் காட்சிகள் எல்லாம் இப்போதும் ஆச்சர்யம்தான். கழுத்தை இறுக்கும் கரத்துக்கு மேலே தலை கிடு கிடு என்று நடுங்க, கரத்துக்கு கிழே உடல் பெண்டுலம் போல ஆடும் அந்த நிலையை  சாப்ளின் சிரமமே இன்றி அனாயாசமாக செய்வது உண்மையில் அதிசயம்தான்.

சாப்ளின் கீட்டன் இருவரில் இருந்து தனக்கான ஸ்லாப்ஸ்டிக் முறையை உருவாக்கிக் கொண்டவர் ஜாக்கி சான். கட்டிப் புரண்டு சண்டை போடுகயில் ஒரே கோட்டுக்குள் இருவர் சிக்கிக் கொள்வது போன்ற பல விஷயங்கள் அவரது தனித்துவம்.

அதே நேரம் ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவையில் குறைவது என்ன எனில்  வித விதமான மனித நடத்தை உடல் மொழிகளை அதில் உருவாக்கி காட்ட இயலாது அதற்கு அவர்கள் பயின்ற உடல் அசைவு சாத்தியங்களே எல்லைகட்டும் என்பது. எல்லா படத்திலும் ஸ்லாப்ஸ்டிக்ல் வெளிப்படுவது ஒரே சாப்ளின்தான். ஒரே கீட்டன் தான். தருணங்கள் மட்டுமே வேறுபடும்.

இதிலிருந்து மாறுபட்டு ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவையில் வித வித மான மனிதர்கள் நடத்தை  வினோதங்களை  கொண்டு வருபவராக டேனியல் லா பெல்லி இருக்கிறார். நகைச்சுவை வரிசையை தேடிப்பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த வரிசையில் ai வழியே இவர் வந்து சேர்ந்தார்.Daniel LaBelle

திருமண புகைப்பட கலைஞர். டிக் டாக் அலையில் தனது அரை நிமிட ஒரு நிமிட ஸ்லாப்ஸ்டிக் துணுக்குகள் வழியே உலகெங்கும் ரசிகர்கள் கொண்டவர். சிறு புன்னகை இன்றியோ வெடித்து சிரிக்கும் ஒரு தருணம் இன்றியோ இவரது துணுக்குகளை கடந்து விட முடியாது.

புதிதாக ஜிம்முக்கு போகும் யுவன் எப்போதும் செட்டைகளை விரித்துக் கொண்டே திரியும் உடல் மொழி, அதன் அபத்தங்கள், சிறுவர் முதல் முதியவர் வரை  தாகத்தில் அவசரத்தில் மேலே கொட்டி  கவிழ்த்தி நீர் அருந்துவது, கண்டிப்பான அம்மா, காதலி முன் ‘ஸீன்’போடும் காதலன்,  என வித விதமான குணாதிசய உடல் மொழிகளை வெறும் ஒரு நிமிடத்திர்க்கும் குறைவான துணுக்குகள் வழியே நிகழ்த்தி காட்டுகிறார்.

எனக்கு பிடித்த பலவற்றில் ஒன்று, தோட்டத்தில் ஓடும் வித விதமான மனிதர்கள்.

இறுதியாக ஓடிவந்து விளக்கு கம்பத்தில் முட்டிக் கொள்ளும் அந்த பகல் கனவாளன் நான்தான் :)

இதே அளவு தீவிரத்தோடு முன்னர் உண்யாகவே புத்தகம் வாசித்திருக்கிறேன். இப்போது வயதாகி விட்டதால் கனிந்து விட்டேன். பின் தொடரும் நிழலின் குரல் அருணாச்சலம் போல புஸ்தகம் இல்லாமலேயே வாசிக்க துவங்கி இருக்கிறேன். டேனியல் லா பெல்லி you tube சானல் உங்கள் பார்வைக்கும் :).

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஊதிப்பெருக்கவைத்தல்
அடுத்த கட்டுரைகண்ணீரும் கனவும்