அரூ அறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகள்

அன்புள்ள ஜெயமோகன்,

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 முடிவுகளை அரூ 11வது இதழில் அறிவித்துள்ளோம். இந்த வருடம் போட்டிக்கு நடுவராக இருந்து கதைகளைத் தேர்வு செய்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அக்கதைகளைக் குறித்து எழுதிய கட்டுரையும் அறிவியலாளரும் இலக்கிய ஆர்வலருமான சரவணன் எழுதிய கட்டுரையும் வெளியாகியுள்ளன.

போட்டிக்கு வந்திருந்த கதைகளைக் குறித்த எங்களது பொதுவான கருத்துகளையும் பகிர்ந்திருக்கிறோம். இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுப்பில் இடம்பெறப் போகும் 12 சிறுகதைகளும், குறிப்பிடத் தகுந்த கதைகளாக இவ்விதழின் பிரசுரத்திற்கு மட்டும் தேர்வாகி இருக்கும் 6 சிறுகதைகளுமாக மொத்தம் 18 அறிவியல் சிறுகதைகள்.

https://aroo.space/issue-11/

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021’ குறித்த உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளோம்.

அரூவின் முதல் இதழிலிருந்து தாங்கள் அளிக்கும் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.

அன்புடன்,
பாலா, ராம், சுஜா

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 3
அடுத்த கட்டுரைஅந்த நூல்