அன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்

ஒரு பேட்டி முழுவதும் ஹிந்தியில் நடக்கிறது. பால்கனியில், ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறார். மெல்ல ஆடியபடியே  பேசிக்கொண்டிருக்கும் அவர் முகத்தில் அஸ்தமன சூரியனின் ஒளி விழுகிறது. அவர் பேசும் ஒரு வார்த்தை கூட எனக்கு புரியவில்லை.  ஆனால் மதிமயங்கி, புலனழிந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.  ஹிந்தி மொழிக்கு இவ்வளவு அழகுண்டா? அவர் பேசுவதனாலேயே அத்தனை அழகாகிறது அம்மொழி.  கலைஞனின் மனம் கண்களில் வெளிப்படும் அல்லவா?  அந்தக் கண்கள் என்னை வெகுவாக மயக்கின. உள்ளேயுள்ள கலையின் கடலாழம் தன்னை கண் வழியே சிறிய அலைகளாக நிகழ்த்திக் கொண்டிருந்தது.

அன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்– அருண்மொழிநங்கை
முந்தைய கட்டுரையானை டாக்டர் புதிய பதிப்பு
அடுத்த கட்டுரைகனவெழுக!