சித்திரை 1 ஒளிநாளில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நிகழ்ந்த கல்லெழும் விதை நிகழ்வின் முழுக்காணொளி இது. யதி: தத்துவத்தில் கனிதல், அறிவு, சின்னச் சின்ன ஞானங்கள் முதலிய புத்தகங்களின் வெளியீடும் தன்மீட்சி வாசிப்பனுபவ கெளரவிப்பும் இந்நிகழ்வில் நிகழ்ந்தேறியது. தேவதாஸ் காந்தி அய்யாவின் பிரார்த்தனைக் குரலோடு துவங்கிய நிகழ்வு, ஆசிரியர்கள் யூமா வாசுகி மற்றும் ஜெயமோகன் அவர்களின் நல்லுரைகளுடன் நிறைவுகொண்டது.
இந்நிகழ்வுரையின் சாரமென்பது, எதிர்மறைத்தன்மைகளை மனமேற்காமல் செயல்களைக் கையாள்வதற்கான உளநிலையைத் தொடர்ந்து தக்கவைப்பது குறித்ததாக இருந்தது. அவ்வகையில் இவ்வுரை செயலாற்றி களமியங்கும் அனைவருக்குமான பொன்னிறப் பாதையை நிச்சயம் அகத்தில் உருவாக்கும். தோழமையுறவுகளோடு இக்காணொளியைப் பகிர்வதில் நிறையுவகை அடைகிறோம்.
‘மனதின் அவலட்சணத்தைத் தவிர்க்க அன்பான வார்த்தைகளுக்குச் சக்தியுண்டு’ என்ற நித்ய சைதன்ய யதியின் சுடர்சொல்லை திரியென இறுகப்பற்றுகிறோம் இக்கணம்.