விருந்து, தீற்றல்- கடிதங்கள்

விருந்து [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

விருந்து கதைக்குச் சமானமான ஒரு கதை முன்பு நூறு கதைகளில் வந்திருந்தது. அதை எவருமே ஞாபகப்படுத்திச் சொல்லவில்லை. சிவம் என்ற கதை. தன்னை கங்கைக்குக் கொடுக்கப்போகும் ஒரு சாமியார் அனைவருக்கும் விருந்து வைத்துவிட்டு கங்கையில் பாய்ந்து மறைகிறார். அதைத்தான் இங்கே ஆசாரியும் செய்தான். அவனுடைய 16 ஆம் நாள் சடங்கைத்தான் செய்திருக்கிறான் [சிவம் [சிறுகதை]

மறைந்த என் பாட்டா சிவசண்முகம் பிள்ளை அடிக்கடிச் சொல்வார். என்னொட 16 நாள் விருந்து கிராண்டா இருக்கணும். எல்லாரும் வந்து சாப்பிட்டுட்டு போகணும்’. இதை ஏன் சொல்கிறார் என்று நினைத்திருந்தோம். அதை அவ்வாறு நடத்தவும் செய்தோம். அந்த மனநிலை இப்போது புரிகிறது

சிவக்குமார்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அருமையான 25 கதைகள். கந்தர்வன், விருந்து இரு கதைகளுமே இரண்டு வேள்விகளைச் சொல்லுகின்றன.

வேள்விகளில், யாரை முன்னிறுத்தி வேள்வி செய்யப்படுகிறதோ, யாருக்கு அந்த வேள்வியின் பயன் சென்று சேருமோ, அந்த யஜமான் தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுக்கிறார்.   மாறாக. அந்த யஜமான் தானே பலியாக வேள்வித் தீயில் விழுந்து விட்டால்?  யஜமான்கள் அப்படி தங்களைத் தாங்களே பலி கொடுத்திருக்கிறார்கள்.

விருந்து கதையின் ஆசாரிக்கு மரண தண்டனை கொடுத்தவர்கள் வேண்டுமானால் தாங்கள் பலி கொடுத்து கடமையை முடித்து விட்டதாக நினைத்து திருப்தி பட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆசாரி தானே முன்னின்று வேள்வி நடத்தி அதில் தானே பலியாக விழுந்த ஆளுமையாகத்தான் தெரிகிறான்.

கொல்லும்போதும் அரசனைப் போல்தான் கொல்கிறான்.  “கொல்லவேண்டிய ஆளு. கொன்னாச்சு…”இறக்கும்போதும் அரசனைப்போல்தான் இறக்கிறான்.

பலி கொடுப்பதோ, யஜமானே பலியாவதோ நடக்கக் கூடியதே. ஆனால், தேவனே பலி ஆனால்? மனிதர்களின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு வேள்வித்தீயில் தேவ குமாரனே விழுந்ததை பைபிள் சொல்லுகிறது. புருஷ சுக்த மந்திரம் பரம புருஷன் பலியாக இடப்பட்டு நடந்ததாக ஒரு வேள்வியை சிருஷ்டிக்கு உருவகமாகச் சொல்லுகிறது.

கந்தர்வன் கதையில் அணைஞ்ச பெருமாளின் இறப்பில் இந்த தெய்வ அம்சம் இருக்கிறது. தங்கள் கஷ்டத்தைத் தீர்ப்பதற்காக வேண்டுதல் வேண்டாமை இலான் ஒருவனை சாகச் சொல்லுகிறார்கள். அவனுக்கு இடும்பையே இல்லை. தயக்கமின்றி இறக்கிறான்.

–  வைகுண்டம்

***

தீற்றல் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்,

வாழ்க்கையின் சில தருணங்கள் மிகவும் அந்தரங்கமானது. மோகமுள்ளைப்போல் பிறர் அறியாமல் இதயத்தின் ஆழத்தில் இருந்து கொண்டு என்றும் ரணப்படுத்திக்கொண்டிருப்பது . எண்ணும்தோரும் இனிமையையும் துன்பத்தையும் தீராத ஏக்கத்தையும் அளிப்பது. புனிதமானதும் கூட.

நெல்சன்

***

அன்புள்ள ஜெ

தீற்றல் ஒரு மென்மையான கதை. போகிற போக்கில் ஒரு கீற்று. அந்த மயிரிழையால் கீறிய கதைபோல. அப்படியே ஆளைக்கொன்றுவிடும் கதை. அத்தகைய தீற்றல்கள் நெஞ்சில் இல்லாதவர்களே இருக்க முடியாது. மனித மனதின் ஆழத்தில் அது இருந்துகொண்டே இருக்கும்.

என் உடலில் அப்படி ஒரு தீற்றல் உண்டு. குற்றாலம் அருவியில் ஒரு சின்ன தள்ளு தள்ளியபோது போய் விழுந்து கம்பியில் சிராய்த்துக்கொண்டது. தள்ளியவள் எங்கோ இருக்கிறாள். தீற்றல் மட்டும் இருக்கிறதுவிருந்து

என்

***

25 எச்சம் [சிறுகதை]

24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகல்வி நிலையங்களில் சாதி
அடுத்த கட்டுரைஓஷோ உரை – தன்முனைப்பின் நூறு முகங்கள்