மூங்கில் இசை கலைஞர்கள்

எனது நண்பர் உண்ணிகிருஷ்ணன் பாக்கனார். திருச்சூரை சேர்ந்த மூங்கில் இசை கலைஞர். அதிரம்பள்ளி அருவியை மணிரத்னம் படங்களில் பார்த்திருப்பீர்கள்.

அதிரம்பள்ளியின் சுற்றுப்புறங்களை சேர்ந்த பழங்குடிமக்களை ஒருங்கிணைத்து மூங்கில் சம்பந்தமான அவர்களுடைய அறிவையும் தொழில்நுட்பங்களையும் கைவினை

பொருட்களையும் உருவாக்கவும் தொழிற்சார்ந்த முறைமையை கொண்டுவரவும் உண்ணிகிருஷ்னண் தொடர்ந்து உழைத்து வருகிறார்.

மூங்கில்களால் செய்த இசைக்கருவிகளை கொண்டு நடத்தும் ஒரு இசைக்குழுவையும் நடத்தி வருகிறார்கள்.

“முள பாடும் ராவு” என்கிற தலைப்பில் தொடர்ந்து மூங்கில் இசை நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள்.

நீங்கள் ஒருங்கிணைக்கும் அல்லது உங்கள் நண்பர்கள் ஒருங்கிணைக்கும்

ஏதேனும் கலை கலாச்சார நிகழ்வில் இந்த மூங்கில் இசைக்கலைஞர்களின் இசையை நடத்த விருப்பம் இருந்தால், ஆர்வம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

http://www.mulapadumravu.blogspot.com/

http://www.youtube.com/user/pakkanar

அன்புடன் சந்தோஷ்

முந்தைய கட்டுரைஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகதைகள் சிந்தனைகள் கடிதங்கள்