நீலம் வாசிக்கும்போது பொருள் பிடிபட்டும் மொழி வழுக்கியபடியே கடந்த அனுபவம் பல பக்கங்கள் இருந்தன. கண்ணனின் பல நிகழ்வுகளை நாம் கதைகளாகக் கேட்டிருப்போம், படித்திருப்போம். ஆனால் தேவகி மைந்தனாகப் பிறந்து வேறொருத்தி மகனாக வளர்ந்த கண்ணன் ஒருவனில் பலராக, பலரில் தான் ஒருவனேயாகக் காட்சி அளித்ததன் மாயம் சொல்லில் அடங்காதது.