ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்

அன்புள்ள ஜெ,
என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான “ஆள்தலும் அளத்தலும்”  தற்போது சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளது. “யாவரும்- பதாகை” பதிப்பகத்தார் இதை வெளியிடுகின்றனர்.

முதல் சிறுகதை வெளியானது 2016ல். அதற்கு நீங்கள் எழுதிய விமரசனம் எனக்கு ஒரு வழிகாட்டுதலாக அமைந்தது (சிறுகதைகள் என் மதிப்பீடு -2). அதில் இவ்வாறு கூறியிருந்தீர்கள்..

“ஆனால் இன்னொரு வகையில் அது எளிதுதான். ஏற்கனவே கதைகள் சொல்லப்பட்டுவிட்ட முறைமைகளை உணர்ந்து அத்தகைய கூறுகளை தவிர்த்து விட்டால் நம் வாழ்வில் எஞ்சுவது எதுவோ அது எல்லாமே புதிய விஷயமாகவே இருக்கும். காளிபிரசாத் அப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும் தொடர்ந்து எழுத வேண்டுமென்றும் விரும்புகிறேன்.”

இதை நான் தீவிரமாக கருத்தில் கொண்டேன். இன்று இந்த தொகுப்பை  தள்ளி நின்று பார்க்கையில் எனக்கு தனிப்பட்ட முறையில் மனநிறைவை அளிக்கிறது.

இந்த தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். அவருடன் நான் தனியாக உரையாடியது ஊட்டி காவிய முகாமில்தான். அதைத் தொடர்ந்து  உங்களுக்கு எழுதிய கடிதத்திலேயே அவர் எனக்கு எந்தளவு ஆதர்சமாக இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.(மொகித்தே நூல் பற்றிய கட்டுரை). நான் சிறுகதை தொகுப்பு வெளியிடுவேன் என்றும் அதற்கு அவர் முன்னுரை எழுதுவார் என்றும் அன்று நானே அறிந்திருக்கவில்லை.

அவ்வப்போது வாசிப்பது என்று இருந்தவன் அன்று ஊட்டி முகாம்நாள் புது நண்பர்களைப் பெற்றேன். என்னுடைய எழுத்தில் சிந்தனைப்போக்கில் நம் நண்பர்களுடனான உரையாடல்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்

சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர். நாஞ்சில் நாடன் அவர்களின் முன்னுரை

பண்ணைக்கு ஒருவன்- நாஞ்சில்நாடன் முன்னுரை 

ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பிற்கான முன்னுரை- காளிப்பிரசாத்

புத்தகம் ஆன்லைனில் வாங்க,
https://www.be4books.com/product/ஆள்தலும்-அளத்தலும்/

சென்னை புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கிலும் புத்தகம் கிடைக்கும். அரங்கு எண்: 95

அன்புடன்,
R.காளிப்ரஸாத்

முந்தைய கட்டுரைஒரு பயணம்
அடுத்த கட்டுரைவிவாதம்,மொழி, எல்லைகள்