இ.பா- ஓர் உரையாடல்

அன்புள்ள ஜெ..

உங்கள் நண்பர்கள் மூவர் ( காளி பிரசாத் , சிறில் அலெக்ஸ்  , சுரேஷ் பாபு) இந்திரா பார்த்தசாரதியை சந்தித்து உரையாடிய யூ ட்யூப் காணொலி தற்செயலாக என் பார்வைக்கு வந்தது

இந்த வயதிலும் இ,பா வின் தெளிவான சிந்தனையும், பேச்சும் ஆச்சர்யப்படுத்தியது. வெகுஜன இதழ்கள் ஆதிக்கம் நிலவிய காலகட்டங்களில் எத்தனையோ இலக்கிய மேதைகள் பொதுமக்கள் பார்வைக்கே வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட,கொடுமை நடந்துள்ளது. அல்லது,  சுந்தர ராமசாமி எனக்கு செய்த துரோகம் , நடிகர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்பது போன்ற அசட்டுத்தனமான தலைப்புகளுடன் பேட்டிகள் வெளியாகும்

எழுத்தாளர் ஆகாவிட்டால் என்ன செய்து கொண்டிருப்பீர்கள் , இலக்கியம் என்றால் என்ன ? எத்தனை நூல்கள் எழுதியிருக்கிறீர்கள் என டெம்ப்ளேட் கேள்விகளைப்பார்த்து வெறுத்துப்போன நினைவுகள் உள்ளன.இந்த சூழலில் இன்று இப்படிப்பட்ட ஆரோக்கியமான பேட்டிகளைப்பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

சிற்றிதழ் காலகட்டத்தை இலக்கியப் பொற்காலம் என்பார்கள்.இலக்கியவாதிகளும் இலக்கியமேதைகளும் பரவலாக,கவனம் பெறும் இன்றைய இணைய யுகம்தான் இலக்கியப் பொற்காலம் என நீங்கள் நினைக்கிறீர்களா?

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

முந்தைய கட்டுரைஎரிசிதை, நகை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள் கடிதங்கள்