ஸ்லம்டாக் மில்லினர், அரிந்தம் சௌதுரி

அன்புள்ள ஜெ,

நீங்க்ள் இண்டியன் எக்ஸ்பிரஸில் எழுதியிருந்த அதே விஷயத்தை இன்னமும் கடுமையான மொழியில் அரிந்தம் சௌதுரி எழுதியிருக்கிறார், வாசித்தீர்களா?http://arindamchaudhuri.blogspot.com/2009/01/dont-see-slumdog-millionaire-it-sucks.html

கெ.

அன்புள்ள கெ

அரிந்தம் சௌதுரியின் கட்டுரையை வாசித்தேன். அக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்படு சண்டே இண்டியன் இதழில் வெளியாகிறது. அத்துடன் அது தினமணி நாளிதழில் முழுமையாகவே விளம்பரமாக நேற்று கொடுக்கப்பட்டிருந்தது.

ஸ்லம்டாக் மில்லினர் படத்தை ஒடி இந்தச்சித்திரம் இன்று வலுவாகவே உருவாகி பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழிலேகூட அதே நாளில் எழுதிய பிற இருவரும் என் கருத்தை ஒட்டியே எழுதியிருந்தார்கள்

அரிந்தம் சௌதுரியின் பல கட்டுரைகளுடன் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. ஆனால் அவர் வழக்கமான இதழாளர்– அறிவுஜீவி அல்ல. அவர் பணத்துக்காக அலைய, கையேந்த வேண்டிய நிலையில் இல்லை. ஆகவே அவர் தன் மூளையை விற்றுவிடவும் இல்லை. ஏற்கனவே அவர் இதழாளர்களைப்பற்றியும் கிட்டத்தட்ட நானெ ழுதிய அதே குரலில் எழுதியிருந்தார். இதழாளர்கள்:ஒரு கடிதம்

http://www.thesundayindian.com/07122008/editorial.asp?pageno=1

நல்ல விஷயம்தான். சில குரல்களாவது எழட்டும்

ஜெ

முந்தைய கட்டுரைஏழாம் உலகம்: கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிலக்கப்பட்டவர்கள்:கடிதங்கள்