முகங்கள்

2018ல் கோவை நண்பர் நடராஜன் கோவையிலிருக்கும் புகழ்பெற்ற ஒரு புகைப்படநிறுவனத்திற்கு என்னை அழைத்துச்சென்றார். ஸ்டுடியோ ஃபோட்டோ என்பது இன்றும் தேவைப்படுகிறது. பெரும்பாலும் போஸ்டர்களில் அச்சிட. நூல்களிலும் அவ்வகை படங்கள் இடம்பெறுவதுண்டு. குறிப்பாக தொழிலதிபர்களின் ஆண்டறிக்கைகளில்

நான் தொழிலதிபராக என்னைக் கற்பனைசெய்துகொண்டு போஸ் கொடுத்தேன். சில புகைப்படங்கள் என் கைக்கு வந்தன.பல நடராஜனிடமே இருந்தன, தேவைக்கு எடுக்கலாமென்று

இப்போது புகைப்படங்களை அனுப்பித்தந்திருக்கிறார். போஸ் கொடுத்த போட்டோக்கள் என்றாலும் சிரிப்பு இருக்கிறது. அன்று என் தலையில் நிறைய முடியும் இருந்திருக்கிறது.

முந்தைய கட்டுரைவிவாதங்கள் நடுவே-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகருத்துக்களை புரிந்துகொள்ள