காந்தியும் தருமனும்

மிகச்செறிவான உரை. வெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன் ஒரு காவியத்தில் பாத்திரப்படைப்பு குறித்து எழுதுவது எளிதான செயல் அல்ல. அதுவும் பள்ளியில் இந்தியை ஆரம்பப்பாடமாக எடுத்ததாகச் சொல்கிறீர்கள். அதற்கான சுவடே கட்டுரையில் தெரியவில்லை என்பதே உண்மை (சில எழுத்துப் பிழைகளைத் தவிர). பாத்திரப்படைப்பை ஒன்றன்பின் ஒன்றாக செறிவான முறையில் அடுக்கி ஒரு சிறந்த வாசிப்பை முன்வைத்திருக்கிறீர்கள். குறிப்பாக கம்சனையும் ராதையையும் வைத்து நீலம் எழுதப்பட்டதை பழுக்கக் காய்ச்சிப் பிறகு தண்ணீரை ஊற்றுவதற்கு நீங்கள் ஒப்பிட்டிருந்தது மிகவும் பிடித்திருந்தது.

காந்தியும் தருமனும்

முந்தைய கட்டுரைசென்ற மார்ச்சில்…
அடுத்த கட்டுரைபடிமங்கள் – கடிதம்