நீலம்- வாசிப்பனுபவம்- மரபின் மைந்தன் முத்தையா.

வெண்முரசு நாவல் வரிசையில் கிருஷ்ணார்ப்பணமாய் மலர்ந்திருக்கும் நாவல் நீலம்.ஆயிரம் ஆயிரம் மயிற் பீலிகள் கண்களாய் விரிய கண்ணனைக் கண்டது போன்ற அனுபவத்தை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.

மகாபாரதத்திலும் பாகவதத்திலும் நடமாடக் கூடிய ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் விஸ்வரூப நெருக்கத்தில் விவரிப்பது வெண்முரசு நாவல்களின் தனித்தன்மை என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

அப்படி சில விஸ்வரூபங்கள் நீலம் நாவலிலும் வெளிப்படுகின்றன. கண்ணனுக்கு  ஒன்பதாண்டுகள் முன்னேயே பிறந்து கண்ணன் பித்துகொண்டு அவனைக் குழந்தைப்பருவம் முதல் கொஞ்சி எடுத்து அவனுக்கு எல்லாமுமாய் இருந்த ராதை இந்த நாவலின் முதன்மைப் பாத்திரம்.

———————————————————————————————–
முந்தைய கட்டுரைதமிழ் வணிக எழுத்தின் தேவை
அடுத்த கட்டுரைபழுவேட்டையர் கதைகள்