கிறிஸ்தவம் பற்றி…

நலம் என நம்புகிறேன். உங்கள் “கோதை” பயண அனுபவங்கள் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தின. எப்போதடா அங்கே செல்வோம் என ஒரு வேட்கை எழுகிறது.எத்தனை க்வீன்ஸ்லாந்து’கள், வி.ஜி.பி. கோல்டன் பீச்கள் வந்தாலும் இயற்கை நம்மைக் கட்டுவதுபோல் வேறேதும் கட்டுவது இல்லை. நிற்க, உங்கள் மதமாற்றம் கடிதங்கள் படித்தேன். அப்படியே உண்மை. ஆனால் நீங்கள் கிறிஸ்தவர்கள் என்றால் ரொம்பவும் கடுமையாக எழுதுபவர் என்ற பிம்பத்தை ஆழ நிலைநாட்டும் வண்ணம் எழுதுவதாய் எனக்கு தோன்றுகிறது.

இது குறை கூறிய விமர்சனம் அல்ல. தன் ஆதர்ச எழுத்தாளரின் பிம்பம் பற்றின ஒரு வாசகனின் கருத்து.

கிரி

வில்லியம் மில்லர் விக்கி 

கிரி,

ஒரு இடத்தை சென்று பார்த்துவிட்டு வருவது வேறு அங்கேயே கொஞ்சநாள் இருப்பது வேறு ,இரண்டாவதில் அந்த அனுபவம் முழுக்க உள்ளே சென்றுவிடுகிறது

நான் கிறிஸ்துவத்தைப்பற்றி இருவகையாகவும் எழுதி வருகிறேன். கிறிஸ்து பற்றிய கட்டுரைகளை படிக்கலாமே…என் தளத்தில் கிறிஸ்து பற்றி மிக முக்கியமான பல கட்டுரைகள் உள்ளன .

நான் கிறிஸ்து- கிறிஸ்தவமதம்- கிறிஸ்தவ மதமாற்ற வெறி மூன்றையும் பிரித்தே பார்க்கிறேன். இந்து மெய்ஞானம்- இந்து மதம்- இந்துத்துவா என்பது போல. மூன்றாவதற்கு எதிரி. இரண்டாவதை ஏற்றுக்கொள்ளவில்லை. முதலில் சொல்லப்பட்டது எனக்கு வழிகாட்டி

ஜெ

தெளிவு. மிக்க நன்றி! அப்போது நானும் உங்கள் மீது வீண் விமர்சனம் வைக்கும் மூடனாயிருந்துவிட்டேன்போல.
எனக்கும் இந்த பெந்தகொச்தேக்களுடன் இதுபோன்ற கொடுமையான அனுபவங்கள் உண்டு. என் பார்வையிலும் அவர்கள் முட்டாள்தனமானவர்கள்தான். நானும் இது பற்றி என் தளத்தில் எழுதினேன். ஆனால் நாசூக்காக <நேரமிருந்தால் படிக்கவும்> http://www.sasariri.com/2010/08/blog-post_30.html
என் போன்றவர்கள் எழுதுகையில் நாசூக்கு என்ற பெயரில் ஒரு திரையை மறைத்து வைத்து எழுதுகிறோம். என்ன செய்ய…

கிரி

கிரி,

நான் நனைந்துவிட்டேன். இனி குளிரில்லை

ஜெ

மதமெனும் வலை

மதம் இரு கடிதங்கள்

மதமாற்றம்-கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇன்று சென்னையில்…
அடுத்த கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள்