அதர்வம்-கடிதம்

அன்பின் ஜெ.எம்.,
துருபதன் கன்னியின் பிறப்பு பற்றி ஓரளவு படித்திருந்தாலும் இத்தனை உக்கிரமாக-அழிவுக்காகவே ஆக்கப்படும் ஒரு சக்தியின் தோற்றுவாயை,அதன் பின்னணியைத் தங்கள் எழுத்தில்..வருணனையில் விரிவாகப் படிக்கையில் ஒருகணம் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றுவிட்டன.
அதர்வம் (அதர்வண வேதம்?)அழிவுக்கு உதவுகிறது என்று தெரிந்தும் அதை விடாமல் பயன்படுத்த முயலுவது – பயன்படுத்துவது…அணு சக்தியைப்போல அழிவின் மீது மனிதனுக்கு உள்ள மாயக் கவர்ச்சிகளில் ஒன்று எனக் கொள்ளலாமா..(பத்மவியூகத்தில் போர் பற்றி நீங்கள் சொன்னது போல..)
வஞ்சம் தீர்க்கும் வெறி தன் சுய அழிவைக் கூடப் பொருட்படுத்தாமல் அதை எளிதாக ஏற்கும் மனநிலைக்குக் கொண்டு சென்றுவிடுவதை முன் வைக்கும் இந்தப்படைப்பு , பழைய பாரதக் கதையின் கிளை மட்டுமல்ல;
இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் பல ‘பாரதங்களை’நினைவு கூர வைப்பதும்தான்.
மீண்டும் கதைகள் தொடர்வதில் மகிழ்ச்சி,
எம்.ஏ.சுசீலா,
புது தில்லி

அதர்வம் [சிறுகதை ]

முந்தைய கட்டுரைமாத்ருபூமி பேட்டி குறித்து
அடுத்த கட்டுரைஞானபீடம்