காந்தி, வாசிப்பு – கடிதங்கள்

Dear Jeyamohan sir,

My name is suresh and i am a close friend of Mr. R.K , Salem.

I am working in a bank in Punjab and i am greatly admired by your books
and presently i am reading your ” Indiya Ganam”.

An incident occured in my life and it disturbed a lot and it struck to
my mind that you are the right person to clear the facts.

Last month i went to RajGhat ,Delhi and i bought a small “Gandhi”
Statute
and placed it on my table in the bank. I am greatly admired by gandhi’s
book and his practices in life and i am very much admired by Gandhian
Philosophy.

In this part of the country, people dislike Gandhi and they literally
scold our father of nation. the public who visit my cabin see the
statute and ask “why do you keep his statute” “what he has done” like
they post so many questions on me. i was Shocked by the langaugae which
they use against Gandhiji.Infact even my own collegues who belongs to
this part of country also have the same opinion.

Today one Mr. sood is a customer of our bank came to the bank
and we were chating so many things about the nation. He was born in
1944. Suddenly when he saw the statute he told me to through the statue
in the dust pin and he told me that he had made the country worst and
so many things which i couldnt digest.

Sir is there any historic reasons that the people of punjab are against
ganghiji.

waiting for your reply

suresh

அன்புள்ள சுரேஷ்

காந்தியைப் பற்றி திட்டமிட்டு பரப்பபடும் எல்லா அவதூறுகளுக்குப் பின்னாலும் இந்தியாவை துண்டாடுவதற்கான ஒரு நோக்கம் இருப்பதை கவனித்தாலே இது யாரால் எதற்காக உருவாக்கப்படுகிறது என்பது புரியும். இந்த நாடு துண்டுகளாகச் சிதறினால் யார் லாபம் அடைவார்கள்?

இத்தகைய அவதூறுகளின் விளைவுகள் நாம் நினைப்பதைவிட கடுமையானவை. நம் சூழலில் எதையும் முறைப்படி வாசித்து, தகவல்களை தெரிந்துகொண்டு, முடிவுகளுக்கு வரக்கூடியவர்கள் ஒரு சதம் பேர்கூட இருக்கமாட்டார்கள். மிச்சபேர் அவர்கள் முன் வைக்கப்படும் கருத்துக்களையே அபிப்பிராயங்களாகக் கொண்டவர்கள்

சமீபத்தில் அம்பேத்கார் என்றபடம் முழுக்கமுழுக்க காந்தியைப்பற்றிய அவதூறுகளுடன் ஒரு இஸ்லாமியரால் [ஜப்பார் பட்டேல்] எடுக்கப்பட்டிருந்தது. அவர் இஸ்லாம் பற்றிய பாபாசாகேபின் கருத்தை ஒரு வரியாவது தன் படத்தில் சேர்க்கும் துணிவுடையவராக இருந்தால் அவரை நேர்மையானவராக ஏற்றுக் கொண்டிருக்க முடியும்

மக்கள் டிவியில் அஜயன்பாலா என்ற கிறித்தவர் நேதாஜியை முன்வைக்கும் சாக்கில் காந்தியை அவதூறு செய்து ஒரு தொலைத்தொடர் எடுக்கிறார்.

இவையெல்லாம் தெளிவான அரசியல், மத உள்நோக்கங்கள் கொண்டவை. பெரும் அன்னிய நிதி உதவிகளுடன் திட்டமிட்டு செய்யப்படுபவை. ஆனால் இவர்களே நம் சூழலில் முற்போக்காளர்களாக அறியப்படுகிறார்கள்.

ஜெ

மறுபதிப்பு :
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். உங்கள் வலை தளத்தில் மட்டுமில்லாது பிற இடங்களிலும் நான் அடிக்கடி கேள்விப்படும் ஒரு வாசகம், “இந்த புத்தகத்தை யாராவது மறுபதிப்பு செய்தால் நல்லது”. இதை படிக்கும்போதெல்லாம் என்னால் என்ன செய்ய முடியும்ன்னு தோணும். ஏதாவது செய்யணுமுன்னு தோணும். இது பணத்தை தாண்டி பலதும் தேவைப்படும் என்று தெரிந்தாலும் என்ன தேவைப்படும்ன்னு தெரியவில்லை. இதைபத்தி எங்காவது எழுதி இருக்கீங்களா? ஏதாவது சுட்டி கிடைக்குமா? ஒரு புத்தகம் மறுபதிப்பு செய்ய என்ன செலவு ஆகும், மற்ற வேலைகள் என்ன. இது தெரிந்தால் என்னைப் போல பலர் இதில் ஈடுபட தொடங்குவார்கள்ன்னு நினைக்கிறேன். தங்கள் நேரத்தை அனுசரித்து முடிந்தால் பதில் எழுதவும்.

அன்புடன்,
கெளதம்

அன்புள்ள கௌதம்

இன்றைய சூழலில் ஒரு நூல் மறுபதிப்பாவது பெரிய விஷயமல்ல. ஒரு சிலர் அதை வாங்க விரும்பி கேட்டாலே போதுமானது. ஒரு நூலை கவனப்படுத்தினாலே அது மறுபதிப்பாகி விடுகிறது

ஜெ

Dear sir,

I have read the “PERUVALI” the experiences of Mr.komal swaminathan was very much appealing .I have gone through a bone marrow biopsy test recently .one woman patient screamed which made me nervous.when my turn came eventhough local anasthiesia was given it was painful and my mind could feel and imagine the testing process..I understood how much pain Mr.komal have undergone. .inspite of all these sufferings his desire for kailash trip and the satisfaction he attained in accomplishing that misson.(the narration was touching.!)i wonder some of the human beings develop extreme courage after passing through extreme pains it is a mystery!

Also your article on the christian sects and their activity it is true.i have seen some cases, .one of my friend’s sister suffered seriously and was given a psychiatric treatment .it is a social(religious) problem and to be addressed by the churches first.Also.it is a complicated issue only indivduals can develop awareness.But you write about this issue very boldly and correctly.many people will agree with you irrespective of religious faith.

lovingly
m veerabhadran

அன்புள்ள வீரபத்ரன்

ஒரு விஷயத்தை நாம் அன்றாட வாழ்க்கையில் வைத்து பார்ப்பதற்கும் மரணத்தின் முன், உச்சகட்டநிலைகளில் நிறுத்திப்பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுண்டு. அப்போது எல்லாமே பொருளும் குறிப்பும் மாறுபட்டு தெரியலாம். சிறியவை பெரிதாகலாம். பெரியவை சிறிதாகலாம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்,
வணக்கம்,வசு தைவ குடும்பகம் என்னும் அதி அற்புதமான லட்சியத்தை தன் வாழ்நாளில் நடராஜ குரு ,காரி டேவிஸ் இருவரும் மனதளவிலும் ஓரளவு செயலிலும் அடைந்ததை உலகம் யாவையும் மூலம் கண்டேன் .அந்த லட்சியத்திற்காக இந்த அளவு முனைந்தவர்களை நான் அறிந்ததில்லை .அதற்காக காரி டேவிஸ் அடைந்த துன்பங்களும் கொடுத்த விலையும் மிக அதிகம் என்று உணர்கிறேன் .ஆனால் காரி டேவிஸ் உலகத்தை சுருக்கி ஒவ்வொரு காலடிகளில் உலகத்தை அளந்து ஒரு விராட தரிசனத்தை அடைந்தது அவருக்கு ஒரு பரமானந்த நிலையை அளித்திருக்கும் என்பதை தாங்கள் மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் ,

அன்புடன்
சி.மாணிக்கம் MANTHARACHALAM
செஞ்சேரிமலை .

அன்புள்ள மாணிக்கம்

நித்ய சைதன்ய யதி ஒருமுறை ஒரு மலைஏற்றக்காரரை பார்த்தார். அவர் மலையேற்றத்தை விட்டுவிட்டு மலையுச்சியில் தனியாக வாழ்ந்து வந்தாராம். இங்கே ஏன் இருக்கவேண்டும் என்று கேட்டபோது பாதி வேடிக்கையாக அவர் சொன்னாராம், மனிதர்களின் வாழ்வதற்கான சாத்தியத்தின் கடைசி நுனியில் இருக்க விழைகிறேன்’ என்று.

சிலர் அப்படி வாழ்கிறார்கள், நுனியில். காரி டேவிஸ் அப்படிப்பட்டவர். அந்த நுனிதான் மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் விளிம்பு

ஜெ

ஜெ,

தனிப்பட்ட முறையில் பாதிக்கப் படாதவர்கள் இன்னல் ஏற்பதும் , அருஞ்செயல் செய்வதும், மாமனிதர்களாக எழுந்து நிற்பதும் கவனிக்கத் தக்கது, பின் பற்றத் தக்கது. இங்கு ஒரு பொதுபுத்தி உள்ளது,(அது சினிமா மூலமாக பயிலப்பட்டிருக்கலாம்), தனி வாழ்வில் கீழ்மைக்கும் இன்னலுக்கும் ஆளானவன் அதில் கிடைத்த வேகத்தில் சமூக மாற்றத்திற்கு உழைப்பான். இவ்வாரிருந்தாலே அவன் தியாகம் பெரிதும் புரிந்து கொள்ளப் படும்.

‘உலகம் யாவையும்’ பெருஞ்சிந்தனையும் , பேரு வாழ்வும் வாழ்ந்த ஒரு மா மனிதனுடையது. தன்னளவில் , தனது குடும்பத்தில், பாதிப்பு ஏற்காவிடினும் , மலை என உயரும் நிஜ மனிதனை அடிக் கோடிடும் கதை.(ஒரு நூலில் பல்லாயிரம் வரிகள் இருந்தால் எந்த வரி புரட்டிச்செல்லும் வாசகன் கவனத்தில் விழும்? ’‘எந்த வரி அடிக்கோடிடப்பட்டிருக்கிறதோ அது….’) இவ்வரிசையில் இது வைரத் தூணனாக நிற்கிறது.

இரண்டு விஷயங்கள், ஒன்று காரி டேவிசின் வாழ்வெழுச்சி, மற்றது இக்கதையின் படைப் பெழுச்சி .

உலகப் போரில் அவன் மனம் அழுந்தப் பட்டு , ஜீரணிக்க இயலாது தெறித்து வருகிற இடம் (சஞ்சலம் மட்டும் உள்ளே எங்கோ எலிபோல கரம்பி சத்தமெழுப்பிக் கொண்டிருக்கும். இரவில் இருளில் அவர் தனிமையில் படுத்ததும் அக்கணம் வரை இருந்த அவரது எல்லா உறுதிகளும் குலையும். தனக்குள் ஓடும் எண்ணங்களின் வதை தாங்காமல் தன் தலையைத் தானே கைகளால் அறைந்துகொள்வார்). கொந்தளிப்பை தணித்துக் கொள்ள ஒரு ஒதுங்கிய, சுருங்கிய வாழ்வு போதும். கொந்தளிப்பின் வீச்சோ , எழுச்சியின் அடியூக்கமோ, டேவிஸ் ஒரு கனவுடன் உருவாகிறார். மனக்கண் திறந்த கணம் முதல் டேவிசை அலைகழிப்பது கட்டுக்களின் நிதர்சனமும் , விடுதலையின் அடைய முடியா இலக்கும் .( மீட்பே இல்லாமல் இந்த அறைக்குள் மானுடம் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது…ஜீஸஸ்!’ உடனே ஓடி ஏதாவது சிறிய அறைக்குள் பாதுகாப்பாக அடைபட்டு விடவேண்டும். அப்போதுதான் வெளியே எல்லையற்ற உலகை உணர முடியும். சுதந்திரத்தை அறியமுடியும்), பின் தனிமை சிறையில் (தூய போதம் மட்டும் இருப்பது. அதற்கு வடிவம் இல்லை. போதம் எப்போதும் புறவுலகப்பொருட்களில் தன்னைப் பிரதிபலித்துத்தான் கண்டுகொண்டிருக்கிறது. வெற்றுச்சுவர்களின் நடுவே தேங்கியிருக்கும் போதம் தன்னைத்தானே விதவிதமாக உணர்வதை மெல்லமெல்ல நிறுத்திக்கொள்கிறது. போதம் என்பது சூழலில் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வுதான்.) மனிதன் வகிக்கும் ஒவ்வொரு பாத்திரமும் ஒரு தளையே . டேவிசின் தனி விடுதலையும் உலகப் பிரஜை கனவும் ஒரு சரி விகித மணர் கடிகை. மேல் குமிழ் தீரத் தீர, கீழ்க் குமிழ் நிறையும், பின் தலை கீழாக. அனால் இதுவும் ஒரு அடைபட்ட பயணமே.

இரண்டாவதாக இக்கதையின் தர்க்கம், விவரிப்பு, மற்றும் காட்சி சித்தரிப்பு.
(அப்படியானால் ஏன் ஊட்டி இந்தியாவுடன் இருக்க வேண்டும்? இந்த மலைப்பகுதியை தனி நாடாகச் சொல்லிவிடலாமே இந்த மலையில் உள்ள அனைவரும் ஒருவரோடொருவர் ஒற்றுமையாக இருப்பார்களே? ஏன் மசினகுடியைக்கூட தனி நாடாக ஆக்கலாமே’)

(ஒரு புத்தகத்தை தோற்கடிக்க மிகச்சிறந்த வழி இந்த ஒரு சொல்தான். அது பக்கம் பக்கமாக என்ன சொன்னால் என்ன? இந்த ஒரு சொல்லைக்கேட்டதும் திகைத்து வாய் பிளந்து நின்றுவிடும்’)

(வழியில் நான்கு குதிரைகள் எதிரே வந்தன. ஒன்று வெண்ணிறம். பிற மாந்தளிர் நிறமானவை. காலைமஞ்சளில் அவை பொன்னாலும் வெள்ளியாலும் ஆனவை போல ஒளிவிட்டன.)

(ஒரே ஒரு செங்கழுகு மட்டும் வானில் வழுக்கி வழுக்கிச் சுழன்றது. ஓரு தனியிறகு போல தன்னிச்சையில்லாமல் இறங்கி சட்டென்று உயிர்கொண்டு சிறகடித்து மேலேறியது.)

(வெண்மேகங்கள் கூரிய நுனிப்பளபளப்பில் குருதியுடன் கிடந்தன.சூரியன் வெப்பமே இல்லாத நீலநிற வட்டமாக வானில் நின்றது. நின்றுபோன மாபெரும் கடிகாரத்தின் அசைவற்ற பெண்டுலம் போல. விளிம்புகளில் இருந்து செவ்வொளி அதிர்ந்து அதிர்ந்து பரவியது.)

கதையின் மையம் பெரிதிலும் பெரிதாக இருப்பதாலேயே, அதே உயரத்தில் அதன் அழகும் வர்ணிப்பும். பெருத்த , கனத்த, நிறத் தந்தங்களுடன் மிடுக்கும் பேரழகுமான ஒரு யானை ஜோடி , ஒன்று இந்திரனின் வென்யானை.

அசைவதேல்லாம் அடங்கினாலும், எரிந்ததேல்லாம் தணிந்தாலும், அமராது தவிக்கும் மனது ‘போதாது’ ‘போதாது’ என்று. ஆம் அதே மனித குல புது நகர்வின் இயக்கு விசை.

கிருஷ்ணன்
ஈரோடு

உலகம் யாவையும்

கோட்டி

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

 

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

முந்தைய கட்டுரைவாசிப்பு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிதிசமைப்பவர்கள்- கடிதம்