அஞ்சலி- எம்.வேதசகாயகுமார்

என் முப்பது ஆண்டுக்கால நண்பரும்,வழிகாட்டியும், இலக்கிய விமர்சகருமான எம்.வேதசகாயகுமார் இன்று மாலை காலமானார்.

சுந்தர ராமசாமியின் அவையில் 1987ல் அவரை நேரில் சந்தித்தேன்.1997ல் நாகர்கோயிலுக்கு வந்தபின் ஆழ்ந்த நட்பு உருவாகியது. சினிமாவுக்கு எழுதவும் ஊர்சுற்றவும் தொடங்கும் காலம் வரை அனேகமாக தினமும் சந்திக்கும் நட்பாக இருந்தது. நாங்கள் இணைந்து சொல்புதிது இதழை கொண்டுவந்தோம். சொல்புதிது காலகட்டம் வேதசகாயகுமாரின் எழுத்துவாழ்க்கையில் மிகத்தீவிரமானது. எல்லா இதழிலும் அவர் நீண்ட ஆய்வுத்தன்மை கொண்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.சங்க இலக்கியம், தமிழிசை இயக்கம் என வெவ்வேறு பண்பாட்டுத்தளங்களை சாந்ர்தவை அந்தக் கட்டுரைகள்

வேதசகாயகுமார் பேராசிரியர் ஜேசுதாசனின் மாணவர். திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றார். அவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்

வேதசகாயகுமாரின் அடக்கம் நாளை [18-12-2020] அன்று மாலை நான்குமணிக்கு நடைபெறும்.

முந்தைய கட்டுரைதற்சிறை
அடுத்த கட்டுரைதர்மனும் அறமும்