இன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நாடுவதும் அதுவே.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் முன்னின்று நடத்தும், தமிழ் இலக்கியத் தோட்டம், எழுத்தாளர் பவா செல்லத்துரையை அழைத்து இணையவழிக் கலந்துரையாடலை நடத்த உள்ளது. நிகழ்வு, வருகின்ற சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு (இந்திய நேரப்படி). அழைப்பிதழை இதனுடன் இணைத்துள்ளேன். அ. முத்துலிங்கம் அவர்கள், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களை பங்குகொள்ள அழைத்துள்ளார்.

அ. முத்துலிங்கம் அவர்கள், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் இணையவழி நிகழ்வில், விருந்தினர் பேச்சாளராக வந்தும் சிறப்பித்தார். தொடர்ந்தும் நமது  நிகழ்வில் பங்குகொண்டு, அவருக்கென தனிமுத்திரையுள்ள கேள்விகளைக் கேட்டு,  நிகழ்வை மேம்படுத்தினார் என்பதை நண்பர்கள் அறிவார்கள். தமிழ் இலக்கியத் தோட்டம் நடத்தும் நிகழ்வில், முதல் ஒரு மணி நேரம் விருந்தினர் பேச்சாளர் பேசுவார் என்றும், அடுத்த அரை மணி நேரம் கேள்விகளுக்கான நேரம் என்றும் திட்டமிடப்பட்டுள்ளதாக இதை எடுத்து நடத்தும் குழு என்னிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொண்டனர்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நிகழ்வுகளின் ஒருங்கமைப்பையும், கட்டுப்பாட்டையும் கேட்டு அறிந்து கொண்டார்கள். வாசக நண்பர்களை,  நிகழ்வில் பங்கு கொண்டு, கேள்விகள் கேட்டு,  அ. முத்துலிங்கம் அவர்கள் நடத்தும் நிகழ்வை சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
வ. சௌந்தரராஜன்,
ஆஸ்டின்.

Meeting id 6472205555

Saturday 19-12-2020

Indian /Srilankan Time. 7:00 PM

Canadian time 8:30 AM

முந்தைய கட்டுரைதுணையென வருவது- கடிதம்
அடுத்த கட்டுரைஇன்ஃபெர்னோ