பெண்கள் எழுதுவது- கடிதம்

உலகுக்குப் புறம்காட்டல்

பெண்கள் எழுதுதல்

அன்புள்ள ஜெ

நான் உங்கள் வாசகியாக இருந்தும் இத்தனை நாட்கள் ஏதும் எழுதியதில்லை. எழுதி அனுப்பாத கடிதங்கள் பத்துக்குமேல் இருக்கும். சொல்லப்போனால் நான் எழுதுவதெல்லாமே உங்கள் பார்வைக்காகத்தான். நீங்கள் படிப்பீர்கள் என்று நினைத்துத்தான் எழுதுவேன். அப்படியே அழித்துவிடுவேன். ஏனென்றால் நீங்கள் பெண்களாக எவரையும் பார்ப்பதில்லை. எந்த சலுகையும் பெண்களாக காட்டுவதில்லை. அனுதாபமோ கரிசனமோ கூட இல்லை. உள்ளடக்கத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். அது இன்றைக்கு எங்கும் இல்லாத விஷயம்

சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]
லோகமாதேவி

இந்த தளத்தில்பல பெண்கள் எந்த தடையும் இல்லாமல் நினைத்ததை எல்லாம் உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இரம்யா நிறைய எழுதுகிறார். லோகமாதேவி, மோனிகா மாறன், சுபஸ்ரீ, சுசித்ரா ராமச்சந்திரன், கங்கா ஈஸ்வர், ஸ்வேதா ஷண்முகம், பிரியம்வதா, கிறிஸ்டி, டெய்சி பிரிஸ்பேன் பொன்ற பலருடைய எழுத்துக்களை நான் கவனிப்பேன். அவர்களுகெல்லாம் எவ்வளவு தைரியம் என்று நினைப்பேன். தயக்கமில்லாமல் அனுப்புகிறார்கள்.

ஸ்வேதா சண்முகம்
சுபஸ்ரீ

அவர்களில் சுசித்ரா இன்றைக்கு பலரும் வியக்கும் எழுத்தாளர் ஆகிவிட்டார். ஒளி தொகுப்பு மிக முக்கியமானது. ஆனால் அவர் நாவல்கள்தான் சிறப்பாக எழுதுவார், சிறுகதையின் வடிவம் அவருக்கு பத்தவில்லை என்று தோன்றுகிறது. மோனிகா மாறனும் கதைகள் எழுதுகிறார் என நினைக்கிறேன். லோகமாதேவியும் சுபாவும் ரம்யாவும் ஸ்வேதா சண்முகமும் நல்ல எழுத்தாளர்களாக ஆகமுடியும். மற்றவர்கள்கூட எழுதவேண்டும் என்ற கனவுடனிருந்தால் எழுதலாம்.

மேரி கிறிஸ்டிi

இவர்களெல்லாம் இன்றைக்கு மற்றபெண்கள் எழுதுவதை எல்லாம் எழுதுபவர்களாக இல்லை. இவர்களுக்குச் சொல்வதற்கென்று நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சிப்பார்வை இருக்கிறது. இவர்கள் தமிழில் முக்கியமானவர்களாக அறியப்படுவார்கள் என்று நினைக்கிறேன். நான் இந்தவரிசையில் இருப்பதாக நினைத்துக்கொள்வேன். ஆனால் என்னால் எழுதுவது தயக்கமாக உள்ளது. நான் முஸ்லீம்குடும்பத்தைச் சேர்ந்தவள். நிறைய கட்டுப்பாடுகள் உண்டு.

பிரியம்வதா
மோனிகா மாறன்

இந்தக்கடிதத்தை நான் அனுப்புவதே ஒரே காரணத்தால்தான். இங்கே புனைபெயரில் எழுதுவது சிறந்தது என்று சொல்லியிருந்தீர்கள். அதேபோல நேரடியான வாழ்க்கையனுபவங்களுடன் தொடர்பில்லாமல் கற்பனையில் சென்று எழுதலாம் என்று சொல்லியிருந்தீர்கள். அப்படி எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த கடிதத்தை அனுப்புவதே அதனால்தான். இன்றைக்கு நாம் முழுநம்பிக்கையுடன் எழுதும் இடங்கள் உங்களைப்போல கிடையாது

நீங்கள் பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களை மட்டும் முன்வைத்து சில கதைகளையும் கட்டுரைகளையும் வெளியிடலாம். பெண் எழுத்தாளர்களுக்கு மட்டுமாக ஒரு நிகழ்ச்சிகூட நடத்தலாம். இன்றைக்கு பெண் எழுத்தாளர்களுக்கு கவனம் கிடைக்கிறது. ஆனால் மரியாதை இல்லை. இதுதான் உண்மை

எஃப்

குர்ரதுலைன் ஹைதருடன்

அன்புள்ள எஃப்

நீங்கள் தொடர்ந்து எழுதலாம். கடிதங்கள் எழுதுவது பெரும்பாலும் புனைவுக்கும் கட்டுரைகளுக்கும் வருவதற்கான ஒரு வழிதான். உங்கள் பெயரில் அல்ல, வேறு பெயரில் எழுதலாம். உங்கள் அடையாளம் வேறெப்போதோ, அதற்கான சூழல் அமையநேரும்போது வெளிவரட்டும். இலங்கையில் அரசு விருதுகள் கொஞ்சம் எளிதாகவே கிடைத்துவிடுகின்றன என நினைக்கிறேன். [சும்மா விளையாட்டுக்காகச் சொன்னேன். இலங்கையர் கோபித்துக்கொள்ளவேண்டாம்]

பெண்களுக்காக மட்டுமென எதையும் நடத்த நினைக்கவில்லை. அப்படி ஒரு தனி அடையாளம் தேவையில்லை. என் மதிப்பிற்குரிய குர்ரதுலைன் ஹைதர், ஆஷாபூர்ணாதேவி போன்றவர்களெல்லாம்’பெண் எழுத்தாளர்கள்’ அல்ல. இலக்கியமேதைகள்

ஜெ

அன்புள்ள ஜெ

பெண்களின் எழுத்து பற்றிய கட்டுரை முக்கியமானது. அதில் மென்மையான முறையில் சொல்லப்பட்டாலும் ஓர் உண்மை உள்ளது. பெண்கள் திரும்பத்திரும்ப குடும்பக்கதைகளையும் காதல்கதைகளையுமே எழுதுகிறார்கள்.ஏனென்றால் அவைதான் அவர்கள் அறிந்த உலகம். அதோடு பெண்களும் அதைத்தான் அதிகமாக படிக்கிறார்கள். இதனால் பெண்கள் ஒரு சின்ன வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பெண்கள் தவிர எவரும் கவனிப்பதே இல்லை

அவர்கள் அதைவிட்டு வெளியே வந்தாகவேண்டும். அதற்குத்தேவை நீங்கள் சொல்வதுபோல கற்பனையால் வாழ்க்கையை எழுதுவது. பெண்கள் தமிழில் துப்பறியும் கதை எழுதுவதே இல்லை. ஏன் எழுதக்கூடாது? ஏன் சரித்திரநாவல்கள் எழுதக்கூடாது?

அந்தக்கட்டுரையுடன் வெளியிடப்பட்டிருக்கும் படம் மிக அழகானது. அர்த்தபூர்வமானது. பெண்கள் எழுதினால் என்ன ஆகும் என்பதை காட்டுவது. அவர்கள் எந்த உலகை அழித்து எந்த உலகை வரைய முயல்கிறார்கள் என்று அது காட்டியது. எப்படி அந்த ஓவியத்தை தேர்வுசெய்தீர்கள் என்று தெரியவில்லை

சுதா மகாதேவன்

அன்புள்ள சுதா,

தமிழில் ராஜம் கிருஷ்ணன் வரலாற்றுப்பின்னணி கொண்ட நாவல்களை எழுதியிருக்கிறார். கோவா சுதந்திரப்போராட்டப் பின்னணி கொண்ட வளைக்கரம் அவற்றில் முக்கியமானது. ஜோதிர்லதா கிரிஜா சுதந்திரப்போராட்டப் பின்னணியில்‘மணிக்கொடி ‘ என்னும் நாவலை எழுதியிருக்கிறார். இவ்வகை எழுத்துக்கள் வார இதழ்களின் நடை, அவற்றுக்கான கதையம்சம் என சில இயல்புகளால் கலையாக ஆகாமல் நின்றுவிட்டன. ஆனாலும் வாசிப்புக்குரியவை. சமீபத்தில் அ.வெண்ணிலா கங்காபுரம் என்னும் வரலாற்றுநாவலை எழுதியிருக்கிறார்.

அந்த ஓவியம் https://newearthpulse.wordpress.com/2013/07/13/painting-our-new-world/ என்னும் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நான் கட்டுரைகளுக்காக ஓவியம் தேடுவதை ஒரு இனிய பொழுதுபோக்காக கொண்டிருக்கிறேன். பல அரிய படங்களை இணைப்பளித்திருக்கிறேன். அவற்றை மிகக்குறைவானவர்களே கவனிக்கிறார்கள். ஆனால் சமகாலக் கலையுடன் தொடர்பு கொள்ள அது எனக்கு உதவுகிறது

ஜெ

சுசித்ரா சில கட்டுரைகள், கதைகள்

வெண்முரசு வாசிப்பு- சுசித்ரா

காவியம்- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

சிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா

கால்கள், பாதைகள்

வம்சவிருட்சாவும் கோராவும் -சுசித்ரா

சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா

மலர் கனியும் வரை- சுசித்ரா

கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)

கொற்றவையின் தொன்மங்கள்

கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்

கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்

கன்னியாகுமரி 3, -பெண்ணியம்

தாயார் பாதமும் அறமும் சுசித்ரா ராமச்சந்திரன்

வெள்ளையானையும் கொற்றவையும் சுசித்ரா ராமச்சந்திரன்

நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல!

மேரி கிறிஸ்டிi

மேரி கிறிஸ்டி- சில கட்டுரைகள்

அசடன் -மேரி கிறிஸ்டி

சுனில்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை- கிறிஸ்டி

சுனில்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை- கிறிஸ்டி

தாகூரின் கோரா

குற்றமும் தண்டனையும் பற்றி…

பிரியம்வதா சில கட்டுரைகள்

மீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா

கல்வி – தன்னிலையும் பணிவும்

அறத்தின் எதிர்முகம் : கச்சர் கோச்சர் மற்றும் தேவகி சித்தியின் டைரி

ஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா

லோகமாதேவி

லோகமாதேவி சில கட்டுரைகள்

வெண்முரசென்னும் உறவின் நிறைவு- லோகமாதேவி

ஜப்பானியத் தேநீர்

சீமைக்கருவேலத்திற்காக ஒரு குரல்

பார்த்தீனியமும் டார்த்தீனியமும்

நஞ்சின் சிரிப்பு

செங்காட்டுக் கள்ளிச்செடி

மூங்கில்,செர்ரிபிளாஸம்,ஜப்பான்

மீச்சிறு கடல் 

யக்ஷிப்பாலை\

சுபஸ்ரீ சில கட்டுரைகள்

மின்னல் மலர்த்திடும் தாழை

பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்- சுபா

ஊடுபிரதிகள்

வெண்முரசு-நீர்ப்பெருந்தழல்

அ.கா.பெருமாள் ‘வயக்காட்டு இசக்கி’

வெண்முரசின் பெண்கள்- சுபஸ்ரீ

இமையத்தைக் காணுதல் – சுபஸ்ரீ

கம்போடியா- நிறைவுப்பகுதி, சுபஸ்ரீ

கம்போடியா- சியாம் ரீப்,மற்றும்… சுபஸ்ரீ

கம்போடியா: அங்கோர் தாம், பிற கோவில்கள்-சுபஸ்ரீ

கம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ

கம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ

அசோகமித்திரனின் இருநாவல்கள்- சுபஸ்ரீ

வனக்காட்சி – சுபஸ்ரீ

பதினேழாம் நூற்றாண்டின் இந்தியா

இரம்யா கடிதங்கள், கட்டுரைகள்

இடைக்காட்டூர் முதல் ராமேஸ்வரம் வரை- இரம்யா

நாடகக்காதல்,திராவிட மனு- ஒரு பெண்ணின் கடிதம்

கங்கா ஈஸ்வர் சில கட்டுரைகள்

நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்

கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்

பெண்களின் எழுத்துக்கள்- கடிதம்

ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை

ஸ்வேதா சண்முகம் கட்டுரைகள்

மொழியாக்கம் பற்றி- ஸ்வேதா சண்முகம்

சிவப்பு கனவுகள் கண்டவன் – ஜூலியஸ் பூசிக் – ஸ்வேதா

டெய்சி பிரிஸ்பேன் சில கடிதங்கள்

இலட்சியக் காதலி -கடிதங்கள்

சோற்றுக்கணக்கு கடிதங்கள்

வன்முறை வளர்கிறதா?

மோனிகா மாறன் சில கட்டுரைகள்

சாயாவனம்

நினைவின் நதியில்- மோனிகா மாறன்

ஜெகே- மோனிகா மாறன்

மரபைக் கண்டடைதல்

முந்தைய கட்டுரைஅன்னமாச்சாரியாவும் கி.ராஜநாராயணனும்-கடிதம்
அடுத்த கட்டுரைஇணைய இதழ்களின் முகம்