அன்பின் ஜெ..
என் குழந்தைகளின் ஆசிரியர் அருண் அண்ணா, திருவண்ணாமலையில் ஒரு மாற்றுப் பள்ளியைத் துவங்கியிருக்கிறார். திருவண்ணாமலையில், மலைச் சூழல் பாதுகாப்பு அமைப்பிலும் ஒரு முக்கிய பங்குதாரர். ரமண சேய் என்று தன்னை அழைத்துக் கொண்ட தேவராஜ முதலியாரின் கொள்ளுப் பேரன் – எனவே திருவண்ணாமலை.
தேர்வு செய்யப் பட்ட சிலர் இவர்கள் என்பது எனது எண்ணம்.
அன்புடன்
பாலா
JeyaMohan
I wish i could write in Tamizh. But truth can be expressed in any language.
I often contemplate on macrocosm and microcosm. What happens in this world mostly coincides with our body. In this case, only 2% weight of Human Brain leads the remaining 98% of Human Body.
Those who know the human history and well thought out knew you were correct.
Sometimes Truth is bitter and common man refuse to accept it. People who have criticized your views , apparently evident in their harsh language that they , are ignorant and half learnt. They just can’t digest the fact that they don’t belong to that 2% or half a percent. I don’t belong either but i should honestly accept it.
Few examples i would give as GD Naidu, Ramanujam, GottFried Leibniz, Descartes, Vivekananda, Ibn Sina, Charaka, Nimabarkacharya, Bramhagupta, Susruta, Aryabatta, Albert einstien, Isaac Newton, Frederick Nietzche, Socrates, Akira kurosovo ….. I can give the names all day along who lived in different times and they amount only less than 2% or half a percent of their times in diff streams. Society that fails to recognize these intellects will be doomed.
We are not equal by birth, some of the people i mentioned above are born genius. Honest person should accept that. Envying their life is not bad but ignoring that fact is just a Hypocrisy.
Reply to அன்புள்ள குமரவேல்
It is so unfortunate that you have (அன்பு)ள்ள only in words. Anyways, Jey did not say that other 99% are downtrodden and they need to be eliminated. To be frank, These 2% or half a percent genius
are just a servant for the remaining 98% percent. It is just you kind of half baked & weak misinterpret and create division among people. I come from a slum, i wish every day that i belong to that 2% to serve the
people but i should live with what i am given with; which doesn’t mean that you should stop learning or striving to be part of that elite group (in other words SERVANTS).
Reply to அன்புள்ள பொன்ராஜ்
Ganesha (pullayar) attained the fruit of knowledge by understanding Siva & Paarvathi (Microcosm) long before Murugan attained by roaming the world and understanding universe (Macrocosm).
So one does not have to meet and mingle with people to know the Truth. Only those who doesn’t possess needs to do that. Still that doesn’t make the latter inferior or the former Superior.
It is just nature that every one is unique.
I can keep debating the points only if three of you can understand any of it. I like to remind you three people one quote from MK Gandhi though i know you may not understand.
[Man, for instance, cannot be untruthful, cruel or incontinent and claim to have GOD on his side.]
Mohanraj Veera
அன்புள்ள ஜெ.
வாழ்க்கையின் lighter moments ஐ தவறவிடக்கூடாது என்பதற்காக இந்தக் கடிதம். உங்களுக்கு ‘அறிவுரை’ வழங்கிய வாசகரால் விளைந்தது.
’ பிறருக்கு அறிவுரை சொல்பவன் ஆணவம் மிக்கவன். அவன் இருட்டிலே இருக்கிறான். நீங்கள் மிகப்பெரிய இருட்டிலே இருக்கிறீர்கள். அதனால்தான் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள்’
என்று படு சீரியஸாக, ஆணவம் அழிந்து, கடையனிலும் கடையனாகி, பின்னரும் உங்களுக்கு அறிவுரைகளையே அள்ளி வழங்கியபோது, என்னை நள்ளிரவில் கிச்சி கிச்சி மூட்டி சிரிக்கவைத்தார்.
’ஒருபசுவுக்கு ஒருவாய் புல்லை கொடுத்தாலே போதும். மிச்சமெல்லாம் வேண்டாத வேலை’
’ஜெ, சீக்கிரம் அருகிலிருக்கும் டாஸ்மாக் ஓடி, ஒரு புட்டி ’புல்’ வாங்கி பசுவுக்கு ஒருவாய் கொடுத்து நீங்களும் தலையில் மூன்றுமுறை புத்தி தெளிய தெளித்துக் கொள்ளுங்கள்.’
மனிதகுலம் தனது பரிணாமத்தின் ஒரு புள்ளியில் ’புல்லின்’ (தேவதேவனின் ’புல்லின் பெருமிதம்’ கவிதை எனக்குப் இப்போதுதான் புரிகிறது) மூலம் மோட்சம் என்று ’ஒன்று’ இருப்பதைக் கண்டுகொண்டிருக்கும். ஆனால் அதைக் குடிக்கும்போது அப்பிராணியான பசுவிற்கும் ஒருவாய் கொடுத்துவிட்டு குடிப்பதே மோட்சத்தை அடைவதற்கான ஒரே வழி என்று தெரியாமல் ஆயிர ஆயிரமாண்டுகளாய் திண்டாடிக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது..
Cut to பூமியின் வெவ்வேறுப் பகுதிகள்
மனிதர்கள், பசுவுக்கு ஒருவாய் ’புல்’ கொடுத்து, ’மே’ என்று பாலை நன்றாக முட்டிக் குடிக்க காத்திருக்கும் கன்றுக்குட்டியைப் போலக் கத்திக்கொண்டு, தீபாவளி ‘ரட்ட வெடி பட்டாசு’ போல அந்த இடத்திலே இருந்து அப்படியே மேலே செல்கிறார்கள்.
Cut to சொர்க்கலோகத்தின் வாசல்.
துவாரபாலகர், சமுத்திரம் போன்ற மக்கள்திரளை தன்முன் கண்டு, ‘அய்யோ மோசம் போயிட்டோமே..ஆட்டம் முடிஞ்சிருச்சி.. ஆட்டம் முடிஞ்சிருச்சி,’ என்று கத்திக்கொண்டே உள்ளே ஒடினார்.
கடவுள் அப்புரம் திரும்பி படுத்திருப்பதைக் கண்டு, ‘கொய்யால..தூங்குரானா, முழிச்சிக்கிட்டு இருக்கானே தெரியல. அஞ்சு தலை பாம்பு மேல கெடப்ப பாரு. மொதல மாதிரி.’
’அய்யோ..சீக்கிரம் எந்திருங்க. எல்லா மனுஷப்பய புள்ளங்களும் ஒரு சேர வந்தாச்சு.’
கடவுள் இப்புரம் திரும்பி, எழுந்து உட்காரும்போது, ’சனியனே, நெளியாத.. யுகம் பூரா தூக்கமில்ல..இன்னொரு தரவ நெளிஞ்ச..சக்கரத்தாலே அறுத்துப்போடுவேன்’
‘வேணாம். பாவம் நம்மல வந்து சேரும். வெளியில நிக்கரவங்ககிட்ட புடிச்சி குடுத்திருங்க’ என்று சொல்லி, துவாரபாலகர், அஞ்சு தலையைப் பார்த்து, கண்களை மூடி வாய்திறந்து, நாக்கு நீட்டி ‘வ்வே’ காட்டினார்.
கடவுள் ’அறிவுரை’ வழங்கிய வாசகரை மட்டும் உள்ளே அழைத்துவரச்செய்து, மீண்டும் அவரை ஒரு செல் உயிரியாக மாற்றி பூமிக்கே அனுப்பிவிட்டு, அப்புரம் திரும்பி படுத்துக்கொண்டார்.
அன்புடன்
ராஜா.
ஜெ,
தேர்வு செய்யப்பட்ட சிலர் – மேலோட்டமாக பார்த்தால் பெரும்பான்மையானவர்களை ஒதுக்கி தள்ளுவது போல தோன்றும். சற்று நுட்பமாக பார்த்தால், உங்கள் கட்டுரையின் நேர்மை புரியலாம். இன்னும் சற்று ஆழமாக பார்த்தால், இப்படி ஒரு பிரிவினை தேவையா என தோன்றுகிறது.
ஒவ்வருவரும் அவர்களுக்கேயானத் தனித்தன்மையுடன் இயற்கையால் உருவாக்கபட்டவர்கள் – அவர்கள் சாமானியர்களாக இருந்தாலும், கலைஞராக இருந்தாலும், ஞானியாக இருந்தாலும்! அவரவருக்கான தனித்தன்மை இயற்கை அவர்களுக்கு அளித்த கொடை. சாமானியர்களுக்கு சாமானியத்தன்மைதான் இயற்கை அவர்களுக்கு அளித்த கொடை. இயற்கை அவர்களுக்கு அளித்த சாமானியத்தன்மையுடன் வாழும்போது, அவர்களும், எந்த ஞானிக்கும் இணையானவர்களாக மட்டும்தானே இருக்க முடியும்? – இயற்கையின் படைப்பு என்ற தளத்தில் பார்க்கும்போது.
பிரபஞ்சம், பூமி, சமூகம் என எந்த அலகில் எடுத்துக்கொண்டாலும் அங்கே ஒரு சமநிலை (Equilibrium) இருந்தாக வேண்டும். சாதரணத்தளத்தில் சம உணர்வு நிலையில் இல்லாமல் இருப்பதுதான் அதீத தளத்தில், அதீத உணர்வு நிலையில் சிறுபான்மையினர் இருப்பதையும் சமன் செய்வதாக இருக்கும் அல்லவா? ஆக, அரை சதவீதம் அதீத உணர்வு நிலையில் இருக்க 99.5 சதவீதம் சாமானியர்களாக இருக்க வேண்டியது அவசியம். இந்த தளத்தில் அதீத உணர்வு நிலையில் உள்ள சிறுபான்மையினர், சாமானியர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள்.
எந்த சாமானியரும், சரியான வாய்ப்புகள் அமைந்தால் ஏதாவது ஒரு தளத்திலேனும் அதீத உணர்வு நிலையை அடையக்கூடிய தன்மை உடையவராக மட்டுமே இயற்கை படைத்திருக்கும் என நான் நம்புகிறேன் – வெறும் நம்பிக்கையாக கூட இருக்கலாம்!
நன்றி,
அகிலன்
http://change-within.blogspot.com
அன்பு ஜெமோ.
தங்கள் “தேர்வு செய்யப்பட்ட சிலர்” கட்டுரையை வாசித்தேன்.
ஒரு காலத்தில் நானும் இதே சிந்தனையில் ஊறி இருந்தேன்.
ஒவ்வொரு வார்த்தையைப்பகிர்ந்து கொள்ளும் முன்பு வகுப்பில்
புலிகளாய் இருந்த “தேர்வு செய்யப்பட்ட சிலர்” முன்பு வெட்கி நிற்க வேண்டுமோ என்று அஞ்சிய நாட்கள் மிக அதிகம். உண்மை தான் – சிலர் பிறப்பாலும் வளரும் சூழ்நிலையாலும் பலரைக்காட்டிலும் முன்பு நிற்கிறார்கள். பலர் – இந்த சூழலுக்கஞ்சியே
பின் நின்று, “என் நிலை இது தான்” என்ற முடிவை எடுத்துக்கொண்டு விட்டு விடுகிறார்கள்.
நானும் அது போன்றதொரு முடிவை எடுத்து, சிந்தித்தல், எழுதுதல், பாடுதல் போன்றவற்றை விட்டிருந்தேன். ஆனால், நான் என் அறிவைப்பற்றி கண்டு கொண்ட விஷயம் ஒன்று உண்டு. சமுதாய அழுத்தம் இல்லாத காலகட்டத்தில், படித்தல், எழுதுதல், பாடுதல், பொதுவாக படைத்தல் போன்ற விஷயங்கள் தானாகவே நிகழ்ந்ததை உணர்ந்தேன். இது அனைவருக்கும் பொருந்துமா?
என்று எண்ணும் போது, “பொருந்தாது” என்று சொல்வது எனக்குச் சரியாகப்படவில்லை.
சரியான சூழ்நிலையில், சீடர்கள் தானாகவே குருவையும் வழியையும் கண்டடைவார்கள் என்ற பதிலே மானிட எழுச்சிக்கு உகந்தது என்று நான் நினைக்கிறேன்.
இறுதியாக, என் நண்பன் எனக்கு சொன்ன ஒரு சிறு உவமை, உங்களுக்கு சொல்லலாம்
என்று தோன்றுகிறது. “வாழ்க்கை ஒரு வீடியோ கேம் பொல. அதில் சிலர் அடுத்த லெவலுக்கு போவதும், சிலர் அதே லெவலில்
நிற்பதும், கவனம், மற்றும் முனைப்பு இவை இரண்டைச்சார்ந்ததே.”
ஒன்றும் புதிதல்ல, “வெள்ளத்தனைய மலர் நீட்டம்” என்று வள்ளுவன் சொல்லியாகிவிட்டது.
அறிவின் தேடலும், புதுமை படைத்தலும் இவ்விதமே என்று தோன்றுகிறது.
மர வியாபாரி இன்று புத்தகங்கள் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் நாளை அவன்
அக அறிவு விழித்துக்கொள்ளாது, அவன் இயற்கையால் கை விடப்பட்டவன் என்று நீங்கள் சொல்வது, கொஞ்சம் தவறானது, பட்டினத்தார் பிறப்பிலேயே சித்தர் அல்லவே.
நாம் மனிதர்களையும், அவர்கள் அற உணர்ச்சியையும், இரசனை மேம்பாட்டையும் நம்பியே ஆக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். எனவே, நான் நம்புவேன் மீண்டும் மீண்டும்.
அன்புடன்,
வா.ப.ஜெய்கணேஷ்
அன்புள்ள ஜெ
உங்கள் “தேர்ந்தெடுத்த சிலர்” கட்டுரையை வாசித்தேன். அதற்கு வர இருக்கும் எதிர்வினைகள் குறித்து அப்போதே சிரித்துக் கொண்டேன்.
ஜெயமோகன் போன்ற அல்லது அறிவுத்தளத்தில் இயங்கும் யாராயினும் சொல்லும் கருத்துக்கள் அவர்களின் தரிசனங்களிலிருந்தும் பிறகு அவற்றை அவர்கள் தங்களுக்குள்ளாகவே ஆழ்ந்த விவாதங்களுக்கு உட்படுத்திய பிறகே வெளியிடுகிறார்கள் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அறிவுரைகளை அள்ளி வழங்கும் ஆட்களை எண்ணும் போது வருத்தமே வருகிறது. ஒரு நல்ல அறிவார்ந்த தர்க்கதிற்கு இது செய்யும் அநீதி கொஞ்ச நஞ்சமல்ல.
உதாரணமாக உங்களை திட்டி எழுதும் ஒருவர் நீங்கள் எழுதுவது குப்பை, ரமணர் எழுதியதுதான் எல்லாம் என்கிறார். அது தான் விவாதமே.எல்லொரும் சமம் என்றால் ரமணரால் மட்டும் எப்படி முடிகிறது. அது வெறும் முயற்சியா அல்லது படைப்பின் பலனும் அடங்கியுள்ளதா என்பதுதான் விவாதமே. அதற்கு அர்த்தம் நீங்கள் சொல்லுவதெல்லாம் சரி என்பதும் அல்ல. அது இன்னும் மோசமானது.
இது போன்ற விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதில் நீங்கள் மிக கவனமாகவே இருக்க வேண்டும். இல்லையெனில் மேலோட்டமாக படித்து இனவெறி/elitist
பிரசங்கமாகவே நீங்கள் சொல்லுவது திரிக்கப்படும் (Why do you require another vikatan moment? ). திருந்தவே மாட்டீர்களா?
நிற்க.
யாரும் சமமாக படைக்கப் படுவதில்லை என்பது ஒரு given. இளையராஜாவும், ரமணரும், JKவும், Hitler,நானும், blood cancerருடன் பிறக்கும் குழந்தையும் சமமாக படைக்கப்பட்டவர்கள் என்றால் சிரிக்கலாம்.
ஒரு முறை எனக்கு ஏற்ப்பட்ட ஒரு மரண பயத்தின் போது ஒரு இரண்டு மணி நேரம் ஒரு தெளிவு பிறந்தது. அது ஒரு அபூர்வமான மன நிலை. I couldnot sustain it.நான் இள வயது தான் (28 இள வயது தானே) என்றாலும், என் வாழ்வில் மீண்டும் அந்த மன நிலை அமைவது கடினம். ஆனால் அதில் பல மடங்கு அதிகமான தெளிவு ரமணருக்கோ,JKவுக்கோ வாய்த்திருக்கும். அதுவே அவர்கள் வாழ்வாக இருந்திருக்கும். ஒரு complete neurological breakdownல் எனக்கு கிடைத்த ஒரு துளியில் பல மடங்கு அவர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைக்கிறது.
இது பற்றி நான் யோசிக்கும் போதெல்லாம் Mozartன் வாழ்க்கையே ஞாபகத்திற்கு வரும். இயற்கையின் இந்த சதியை Amadeus திரைப்படம் அருமையாக கையாண்டிருக்கும். Sallieriன் அருமையான dialogue ” If God didn’t want me to praise him with music. .why implant the desire. .like a lust in my body.. And then deny me the talent? ”
இயற்கை எல்லோருக்கும் சமமாக கொடுத்தது மரணம் ஒன்று தான்.
பால சிதம்பரம்
ஜெயமோகன் அவர்களுக்கு சமத்துவ வணக்கம்.
உங்களுடைய சமத்துவத்திற்கு எதிரான கட்டுரையும் அதை எதிர்த்து எழுதிய சமத்துவ தோழர்களின் கடிதத்தையும் படித்தேன். விரைவில் சமத்துவஉலகம் மலரப்போகிறது என்பதை உங்களைப்போண்ற மேட்டிமைவாதிகளுக்கு எச்சரித்துக்கொள்கிறேன். அதற்கான விதிமுறைகள் சமத்துவ சமூக அமைப்பாளர் குழுவினரால் ஆலோசித்து உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை உங்களுக்கு தருகிறேன். உங்கள் மேட்டிமைதனத்திற்கான தீர்வாய் அவை அமையும்.
1. பள்ளிகளில்தான் பிஞ்சு மனதினிலேயே மேட்டிமைவாதம் என்ற நஞ்சு உருவாக்கப்படுகிறது. அதிகமதிப்பெண் எடுப்பவர்கள் தான் மற்ற பிள்ளைகளை விட உயர்ந்தவர்கள் என நினத்துக்கொள்கின்றனர். ஆகவே அனைவருக்கும் எப்போதும் சம மதிப்பெண்கள் பெறவேண்டும். யாராவது ஒருமாணவன் மற்றவரைவிட அதிகமதிப்பெண் எடுத்தால் அதற்கான ஆசிரியர் தண்டிக்கப்படுவர். அந்தமாணவனுக்கு மின் அதிர்ச்சி, மூளைச்சலவை போன்றவற்றின்மூலம் அறிவுத்திறன் குறைக்கப்படும்.
2. அனைத்து நுழைவுத்தேர்வுகள் நேர்காணல்கள் தகுதித்தேர்வுகள் நீக்கப்படும். சீட்டுக் குலுக்கிபோட்டு தேர்ந்தெடுக்கும் முறையே (சீகுதேமு) அனைத்திற்கும் பயன்படுத்தப்படும். (இதை முற்காலத்தில் குடவோலை முறை என்று கூறுவர்.). கல்லூரி சீட்டுகள் நிரப்புதல், வேலை நியமனம், தேர்தல் போன்ற அனைத்திற்கும் இந்தமுறையே பயன்படுத்தவேண்டும்.
3.. அனைவருமே சமம் எனும்போது ஒருசிலரின் பெயர்கள் மட்டும் வரலாறு, அறிவியல் நூல்களில் இடம்பெற்றுள்ளது தவறாகும். ஆகவே நூல்களில் உள்ள அனைத்து பெயர்களும் வெண்திரவ மசியினால் (white fluid) அழிக்கப்படும். அனைத்து மனிதர்களின் சிலைகளும் அகற்றப்படும். இல்லையென்றால் உலகில் பிறக்கும் அனைவருக்கும் சிலை வைக்கப்படும்.
4. பதிப்பாளர்கள் ஒருசிலரின் நூல்களை மட்டுமே பதிப்பது மேட்டிமைவாதத்தின் இன்னொரு தீங்கான விளைவாகும். யார்எதை எழுதி கொடுத்தாலும் அதை அப்படியே பதிப்பிப்பது கட்டாயமாக்கப்படும். தங்களால் முடியாத அளவில் அதிக எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் அணுகினால் ‘சீகுதேமு’ பயன்படுத்தவேண்டும். (எப்படி புத்தகங்களை விற்பது என்ற கவலைவேண்டாம் அடுத்த விதி தீர்த்துவைக்கும்.)
5.புத்தகக்கடையில் சென்று ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் புத்தகத்தை கேட்டு வாங்குவது தடை செய்யப்படும். ‘சீகுதேமு’ பயன்படுத்தப்பட்டு புத்தகங்கள் வழங்கப்படும். ஆகவே யார் எழுதிய புத்தகமும் விற்காமல் போகாது அதேசமயம் அனைவர் புத்தகமும் ஒரே அளவில் விற்பதால் சமத்துவம் நிலைநாட்டப்படும்.
6.சிலர்தட்டச்சு வேகமாக தட்டி கதை கட்டுரைகளை அதிகம் எழுதிவிட்டு தன்னை உயர்த்திக்கொள்கின்றனர். ஆகவே சமூக தட்டச்சு வேக சராசரி (எழுத்தறிவில்லாதவ்ர்களையும் சேர்த்து) கண்டறிந்து, அதைவிட வேகமாக தட்டச்ச இயலாதவண்ணம் விசைப்பலகைகள் தயாரிக்கும்படி பார்த்துக்கொள்ளப்படும்.
7. சிலர் ஒழுக்கமாய் வாழ்வதால் தன்னை உயர்வாய் நினைத்துக்கொள்கின்றனர். அதனால் குடிப்பது புகைபிடிப்பது போன்ற பழக்கங்களை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். மேலும் கள்ள உறவு, திருமண வயது வந்தவர் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படும். அனைவரும் இருபால் விழைவுள்ளவர்களாக இருப்பதும் நடப்பதும் அவசியமாகும்.
8. மனிதர்கள் தன்உடல்நிறத்தினால் தன்னை உயர்வாக கருதிக்கொள்கின்றனர். ஆகவே அனைவருக்கும் ஒரே வண்ண சாயம் உடல்முழுக்க நிரந்தரமாக பூசப்படும்.
9.சமூக மக்களின் சராசரி உயரம் காணப்பட்டு அதைவிட உயரமாய் இருப்பவர்களின் உயரம் தகுந்த அறுவைசிகிட்சைகளின் மூலம் குறைக்கப்படும். உயரம் குறைந்தவர்களுக்கு கால்களிலோ தலையிலோ கட்டைகளை பிணைத்து உயரம் கூட்டப்படும்.10. ஆண் பெண் என வேறுபடுத்திக்காட்டும் உறுப்புகள் உடலிலிருந்து அறுவை சிகிட்சையில் நீக்கப்படுவதன் மூலம் ஆண்பெண் சமத்துவம் நிலைநிறுத்தப்படும்.
இப்படிக்கு
சமத்துவ தோழன்
த.துரைவேல்