வாசிப்பவர்கள்- கடிதம்

செல்வேந்திரன் வாசித்தது எப்படி?

அன்பு ஜெ,

நான் இரண்டாவது படிக்கும்போது பள்ளிப்படிப்பை நிருத்திவிட்டு பாடசாலையில் சேர்த்தனர் பெற்றோர் ,வறுமை காரணமாக.ஒன்பது வருட வேத படிப்பிர்க்கு பின்  வெளியில் வரும்போழுது பொதுஅறிவும் சமூக அறிவும் போதுமானதாகயில்லை அதிலிருந்து மேலே என்னை வளர்த்துகொண்டது என் இலக்கிய வாசிப்பினூடாக. 25 வயதாகும் எனக்கு பள்ளியில்,கல்லூரியில் படித்த மாணவர்களை விட சமூகபார்வையும்  நுண்ணறிவும் அதிகம் இருப்பதில் வியப்பில்லை. எனது உறவினன் B.com இறுதியாண்டு படிக்கிறான் தமிழில் எழதவோ படிக்கவோ தெரியாது,ஆங்கிலவழி கல்வியாதலால்  என்றால், ஆங்கிலத்திற்கும் கிட்டதட்ட இதே நிலமைதான்.

அவன் நண்பர்களும் என் தெருவில் வசிக்கும் இளைஞர்களும் இதே போலத்தான் இருக்கிறார்கள்.அவர்கள் தேர்ச்சி பெறும் துறையிலும் வேலையில் நுழைந்த பிறகுதான் தெரிகிறது அவர்களின் முதிர்ச்சியின்மையும் தேர்ச்சியின்மையும்.இவர்கள் இப்படியே சாதி அடையாத்தை தூக்கிபிடிக்க ஆரம்பிப்பார்கள்,சுழியலை கெடுத்தலில் இறங்குவார்கள் இன,மத,வாதிகளாகி,எதையும் அறியாமலேயே வாழ்ந்து முடிப்பார்கள்.இந்த பெரும் சமூக சீர்கெடலை அகழியை சீர்செய்வதர்கு நமக்கு இருக்கும் வாய்ப்பே “வாசிப்பு”.

செல்வேந்திரனின் “வாசிப்பது எப்படி”என்ற நூல் இந்த இக்கட்டை உலகளாவியதாக முன்னெடுக்கிறது.அறிவார்ந்த செயலாகவோ ஆன்மீக செயலாகவோ மட்டும் வாசிப்பை கூறாமல் பொருளாதாரரீதாயாகவும்,ஆளுமையை கட்டமைப்பதில் வாசிப்பின் முக்கியத்துவத்தையும்,குடும்பத்தில், தன் துறையில்,நண்பர்கள் வட்டத்தில் என அனைத்திலும் தன்னை முதன்மை படித்தில்கொள்வதற்கு வாசிப்பின் அவசியத்தை சொல்கிறது.சரளாமான எளிமையான மொழி.வாசிப்பால் வாழ்க்கையில் முன்னேறியவர்களை எடுத்துக்காட்டாக சுட்டும் போது உலகியல் வெற்றியாளர்கள் விராட் கோலி,ஜெயலலிதா போன்றோர்களை சுட்டுவது பொருத்தமாகவே இருக்கிறது.

ஆனால் வாசிப்பை முன்னெடுப்பதில் ஒர் வாசிப்பாளன் தான் வாசித்ததை மட்டும் பகிர்ந்தால் போதும் என்பதை தாண்டி நாம் கூட்டாக அமைப்பாக செய்ய வேண்டியது என்ன என்பதை சிந்திக்கும் தருணம் இது.

அன்புடன்

’எம்’

அன்புள்ள எம்,

நலம்தானே?

இன்றைய சூழலில் உங்கள் பெயரில் தனிப்பட்ட செய்திகளுடன் எழுதுவது தேவையில்லாத சிக்கல்களை கொடுக்கும். ஆகவே புனைபெயரில் எழுதுங்கள்.

உங்களுக்கு ‘அனங்கன்’ என்று பெயர் சூட்டுகிறேன். எனக்கு பிடித்தமான பெயர்களில் ஒன்று. உடலில்லாதவன், காமதேவன். சில ஆண்டுகள் தீவிரமாக எழுதி ஓர் இடம் அமைந்தபின் நீங்கள் உங்கள் அடையாளத்தை காட்டலாம். இந்தப் பெயரில் ஒரு மின்னஞ்சல் உருவாக்கிக்கொள்ளுங்கள்

அதுவரை உடல் இல்லாமலிருப்பதன் சுதந்திரத்தை அனுபவியுங்கள். தயங்காமல் தொடர்ச்சியாக எழுதுங்கள். எழுத்தாளன் என்பவன் தன் உள்ளம் மொழியை மறக்கும்வரை எழுதிப்பழகவேண்டியவன். கற்பனை ஓட மொழி இயல்பாக உடன்வந்துசேரவேண்டும்

ஜெ  

உலகுக்குப் புறம்காட்டல்

முந்தைய கட்டுரைவியாசபாரதமும் வெண்முரசும்
அடுத்த கட்டுரைதொள்ளாயிரம் மின்னஞ்சல்கள்