அஸ்வமுகி

இன்று எம்.எஸ். அவர்களை எண்ணிக்கொண்டேன். அவர் மறைந்து இரண்டரை  ஆண்டுகளாகின்றன. ஆனால் நினைவில் இருந்துகொண்டிருக்கிறார். எங்கோ அருகே இருக்கிறார், எக்கணமும் அந்த பையை தூக்கிக்கொண்டு தடித்த கண்ணாடிக்கு அப்பால் இனிய சிரிப்புடன் வந்துவிடுவார் என்பதுபோல.

எம்.எஸுக்கு பிடித்த நடிகை நர்கீஸ். அவளுக்கு குதிரைமூஞ்சி என்று எவரோ சொல்லிவிட்டார் என்பதற்காக அவரும் சுந்தர ராமசாமியும் மனம் வருந்தியிருக்கிறார்கள். உண்மையில் அவள் நடித்த படங்களை தேடிப்பார்த்தபோது முதலில் அப்படித்தான் எனக்கும் தோன்றியது. இப்போது பார்க்கையிலும் அப்படித்தான் தோன்றுகிறது.

சுந்தர ராமசாமி சொன்னார். ஒருமுறை கேரளத்தில் எங்கோ ஒரு விடுதியில் அன்றைய எழுத்தாளர்கள் அனைவரும் கூடியிருந்தபோது ஒரு காகிதத்தில் பெயரில்லாமல் அவர்களின் ரகசிய ஆசைகளை எழுதிப்போடவேண்டும், குலுக்கியபின் படிக்கவேண்டும் என முடிவுசெய்தனர். படித்துப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு வெள்ளைக்காரக் காதலி வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது

அதுதான் நர்கீஸை விரும்பக் காரணம் என நினைக்கிறேன். மும்பையில் நர்கீஸைப்போலவே தோன்றும் பல பார்ஸி, ஆங்கிலோ இந்தியப் பெண்கள் உண்டு. ஆனால் எம்.எஸ்ஸை நினைத்துக்கொண்டு பார்த்தால் பிடித்திருக்கிறது.

எத்தனை கனவுகள், சுவைகள், நுண்ணிய கொண்டாட்டங்கள். மானுடர் வாழ்ந்து மறைந்தபின் எங்கு செல்கின்றன அவை!

எம்.எஸ். அலையும் நினைவுகள்-1

எம்.எஸ். அலையும் நினைவுகள்-2

எம்.எஸ். அலையும் நினைவுகள்-3

அஞ்சலி: எம்.எஸ்

————————– ——————————– ——————————–

Aaja sanam madhur chandni mein hum

]Come beloved, in the sweet moon]

Tum mile to wirane mein bhi aa jayegi bahaar

[If we meet, the Spring will come into the wilderness]

Jhumne lagega aasman

[The sky will dance]

Jhumne lagega aasman

[The sky will dance]

Kehta hai dil aur machalta hai dil

[The heart says and the heart wriggles]

More saajan le chal mujhe taaron ke paar

[My beloved, take me to the other side of the stars]

Lagta nahin hai dil yahan

[My heart does not feel here]

Lagta nahin hai dil yahan

[My heart does not feel here]

Bheegi bheegi raat me, dil ka daaman thaam le

[In the damp rain, hold on to the lap of your heart]

Khoyi khoyi zindagi, har dam tera naam le

[A lost life, takes your name every time]

Chand ki behki nazar, keh rahi hai pyaar kar

[The faltered glance of the moon, says to love]

Zindagi hai ek safar, kaun jaane kal kidhar

[Life is a journey, who knows where we will be tomorrow]

Chand ki behki nazar, keh rahi hai pyaar kar

[The faltered glance of the moon, says to love]

Zindagi hai ek safar, kaun jaane kal kidhar

[Life is a journey, who knows where we will be tomorrow]

Aaja sanam madhur chandni mein hum

[Come beloved, in the sweet moon]

Tum mile to wirane mein bhi aa jayegi bahaar

[If we meet, the Spring will come into the wilderness]

Jhumne lagega aasman

[The sky will dance]

முந்தைய கட்டுரைநீலச்சிலை
அடுத்த கட்டுரைபுவியரசு- கடிதம்