சுகிசிவமும் சுப்ரமணியனும்- கடிதம்

சுகிசிவமும் சுப்ரமணியனும்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

சுப்ரமணியர் குறித்த ஒரு கடிதத்திற்கு தங்கள் கட்டுரை வடிவ பதில் மிக அருமை. கடவுள் உருவ வழிபாட்டின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராய்ந்து, கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை போலவே அமைந்திருந்தது.
திரு. சுகிசுவம் அவர்கள் பக்தி மார்க்கத்தில் அடிப்படையிலும், ஒரு ஆன்மிக சொற்பொழிவாளர் எனும் அடிப்படையிலும் தன் கருத்தை தெரிவித்திருந்தாலும், தங்கள் பதிலை அவரின் உள்மனது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் என்றே நினைக்கிறேன்.
கடவுள்களின் உருவ வழிபாடு பல்வேறு கால கட்டங்களில் பலவித மாற்றங்களை கொண்டிருந்தாலும், அவற்றை ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் மனநிலையை பொறுத்தே அமைந்திருக்கிறது என நினைக்கிறேன். உதாரணமாக ரவிவர்மாவின் கடவுள் ஓவியங்களை அவர்கள் மிக எளிதில் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விலக மனமின்றியே இருக்கிறார்கள். அவரின் சரஸ்வதி ஓவியமும், முருகன் ஓவியமும் இதற்கு நல்ல சான்று. குழந்தை முருகனின் சிவகாசி ஓவியமும் மற்றொரு உதாரணம். எனவே மக்களின் மனநிலையே கடவுள் உருவ வழிபாட்டின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கொள்ளலாமா?
அன்புடன்
இளம்பரிதி.
முந்தைய கட்டுரைகதாபாத்திரங்களின் உருமாற்றம்
அடுத்த கட்டுரைம.நவீன் சிறுகதைகள்- கடிதம்