கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதம்

கே.ஜி.சங்கரப்பிள்ளை

அன்பு ஜெயமோகன்,

கே.ஜி.சங்கரப்பிள்ளை மீண்டும் பித்து பிடிக்க வைத்து விட்டார்.

காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது கவிதையின் அடர்த்தியில் இறுக்கம் இல்லை; நெருங்குபவனை ஆரத்தழுவிக் கொள்ளும் எளிமையே பொங்கி நிறைந்திருக்கிறது.

காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது எனும் சொற்றொடரே ஒரு தரிசனம். அத்தரிசனத்தில் கரைந்திருந்த நிமிடங்கள் அலாதியானவை. தரிசனத்தின் உள்ளடுக்குகளைக் குடைந்து செல்லும் பாக்கியம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்குமே கிடைக்கிறது.

முழுமையைக் குறிக்கோளாகக் கொண்டு தவிக்கும் மனதின் ஆற்றாமையைச் சிறுசொடுக்கில் பதறச் செய்துவிட்ட கவிவரிகளைக் கொண்டாடத் தலைப்படுவது, மாபெரும் கொடுப்பினை. அகத்தளத்தில் முறுக்கியபடி மதர்த்திருக்கும் இறுமாப்புச்சட்டகங்களைக் கிழித்துச் சிதைத்த எதிரியும் கசப்பதில்லை முழுக்க என்பன போன்ற தெறிப்புகள்.

”போவது என்றால் என்னை நான் விடுவித்து எடுப்பதா அல்லது எல்லாம் என்னை விட்டு அகல்வதா” எனும் அக்னிச்சுடரில் நம் அகங்காரத்திமிர் திணறிச் செருமியே ஆக வேண்டும். ”நினைவோ கனவோ காயமோ காட்டுவதில்லை முழுக்க” எனும் தீட்சண்யத்தில் நெக்குருகி மெளனிப்பதைத் தவிர மாற்றில்லை.

 எங்கு முழுக்க பெய்வேன் நான் என் மழையை என்ற சித்திரத்தின் ஊடாக என் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அப்பட்டமாக்கிய கே.ஜி.,சங்கரப்பிள்ளையின் பாதங்களில் நெடுக வீழ்கிறேன். 

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

தொப்பி, நாய்,வளைவு – கே.ஜி.சங்கரப்பிள்ளை

கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை

வேதம்,இறந்தோர்,முள்ளம்பன்றி: கே.ஜி.சங்கரப்பிள்ளை

வழி, சூரியன்,ராமன் : கே.ஜி.சங்கரப்பிள்ளை

சுழல்,எலி,மேடை – கே.ஜி.சங்கரப்பிள்ளை

புத்தன்,கழுகு,பலா – கே.ஜி.சங்கரப்பிள்ளை

வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை

சோலை,பயம், உறக்கம்: கே.ஜி.சங்கரப்பிள்ளை

காலியிடங்களும் கரிக்கலையங்களும்- கே.ஜி.சங்கரப்பிள்ளை

வரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை

பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

முந்தைய கட்டுரைவெண்முரசு- ஒரு வாசிப்பு
அடுத்த கட்டுரைகதைகள், கடிதங்கள்