அன்புள்ள ஜெ,
வண்ணதாசன் விருது விழா சமயத்தில் நாஞ்சில்நாடன் பேசும் போது சொன்னார் தமிழ் இலக்கியவாதிகளின் உயிர் மிக சன்னமானது சைக்கிள் டயர் வெச்சு எத்தி கொன்னா கூட போயிரும். அதிலிருந்து உருவாகி வந்தது தான் இந்த பழுவேட்டையர் கிடாரம் கொண்டான் கதைகள். கும்பமுனி தவசு பிள்ளையின் வேறு நீட்சி என சொல்லலாம். உங்க மனநிலைக்கு இது உதவக்கூடும் என்பதால் இவற்றில் சிலவற்றை அனுப்புகிறேன்.
பழுவேட்டையர் கதைகள்
https://padhaakai.com/2017/02/12/the-nine/
https://padhaakai.com/2017/07/30/the-ideal-literary-reader/
https://suneelwrites.blogspot.com/2020/03/blog-post_17.html
https://suneelwrites.blogspot.com/2019/08/blog-post.html
http://kanali.in/maperum-novel-kuraitheerppu-mukaam/
https://padhaakai.com/2017/05/28/so-what/
அன்புள்ள சுனில்
இலக்கியத்திற்குள் இலக்கியத்தைப் பகடிசெய்யும் கதைமாந்தர்கள் நவீன இலக்கியத்தின் சிறந்த உருவகங்களில் ஒன்று. வழக்கம்போல புதுமைப்பித்தனே வழிகாட்டி. இலக்கிய மம்மநாயனார் புராணம் உட்பட.
அது இலக்கியத்தை கொஞ்சம் எளிதாகப் பார்த்துக்கொள்ள வாசகர்களுக்கு உதவுகிறது. கும்பமுனிக்கு ஜீவா வரைந்தளித்த ஓவியம் ஒரு முகம் அளித்தது. அதைப்போல ஒரு முகம் பழுவேட்டரையருக்கும் அமையலாம்
ஜெ