கருத்துக்களை புரிந்துகொள்ள

சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு

இனிய ஜெ சார்,

இலக்கிய வாசிப்பு எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு நீங்கள் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக “சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு” என்ற கட்டுரையை நான் பலமுறை வாசித்து, என்னுடைய இலக்கிய வாசிப்பில் முடிந்தவரை பின்பற்றி வருகிறேன்.

ஆனால் இலக்கியமற்ற நான்-ஃபிக்ஷன் எழுத்துக்களை வாசிப்பதற்கு சிறப்பான வழிமுறை என்றிருக்கிறதா?

மூன்று குறிப்புகளை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது:

1. வாசித்ததை அதே துறையின் பிற புத்தகங்களுடன் சேர்த்து சிந்தித்துப் பார்த்து வளர்த்துக் கொள்வது.

  1. வாசித்ததை நம் அனுபங்களுடன் பொருத்திப் பார்த்து தெளிவுப் படுத்திக் கொள்வது.
  2. புத்தகத்தைப் பற்றி ஒரு கட்டுரையாக எழுதி கருத்துக்களை செரித்துக் கொள்வது.இவற்றுடன் வேறு வழிமுறைகள் உள்ளனவா? இயன்றால் தெளிவுபடுத்த முடியுமா?அன்புடன்

கிருஷ்ணன் ரவிக்குமார்

***

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்,

கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள ஒரே வழி என்பது அவற்றை நம் சொற்களாக ஆக்கிக்கொள்வது. நம்முள் நம் கருத்துக்கள் நமது சொற்களாக உள்ளன. அவை நம்முள் ஓயாமல் விவாதங்களாக, நினைவுத்தொடராக ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தப்பெருக்கில் கலந்துவிடும் கருத்துக்களையே நாம் அடைந்திருக்கிறோம். கலக்கவில்லை என்றால் அவை நம்மை அடையவில்லை.

அவ்வாறு கலக்கவைப்பதற்குரிய சிறந்தவழிதான் மேலே சொன்னது. ஆனால் முதன்மையான வழி விவாதம். சென்னை ஈரோடு, காரைக்குடி, தஞ்சை திருவாரூர் கோவை பாண்டிச்சேரி என பல ஊர்களில் நம் நண்பர்கள் வாசித்த நூல்களைப்பற்றி சந்தித்து விவாதிக்கிறார்கள். இணையவிவாதக்குழுமங்களும் உள்ளன. விவாதங்கள் வழியாக நாம் அறிந்தவற்றை தொகுத்துச்சொல்ல ஆரம்பிக்கிறோம். நாம் வாசித்த கருத்துக்களை நம் சொந்தச் சொற்களாக, நம் கருத்துப்பரப்பின் பகுதிகளாக ஆக்கிக்கொள்கிறோம்

ஜெ

விமர்சனம் பழகுவது…

எப்படி வாசிப்பது?

புனைவு, புனைவல்லா எழுத்து

இலக்கிய வாசகனின் பயிற்சி

முந்தைய கட்டுரைமுகங்கள்
அடுத்த கட்டுரைகி. ரா. விழா உரை