தொலைவு

சொல்வதற்கும்

சொல்லவிழைவதற்கும்

நடுவிலிருக்கும் அந்த பெரும் பாலையை

இப்போதென

உணர்ந்திருந்தால்

என்றோ நானும் மன்னித்திருப்பேன்

இங்குளோரையெல்லாம்

 

விழைந்த பாதைகளிலெல்லாம்

நடக்கும் துணிவிருந்திருந்தால்

பெருஞ்சுமையுடனேனும்

வந்தடைந்திருப்பேன்

உன் மாளிகை முற்றத்தை

 

எடுத்த அனைத்தையும்

திரும்ப வைத்துவிட்டால்

எத்தனை எளியது நடப்பதென்று

தெரிந்துகொள்ள மிகவும் பிந்திவிடுகிறது

 

ஆயினும்

அனைத்து இயலாமைகளையும் சொல்லி

ஒரு மௌனவிழிநீர்த்துளியால்

நெடுந்தொலைவுக்கு நெருங்கிவிடமுடிகிறது

முந்தைய கட்டுரைசங்கக் கவிதைகள் நாட்டுப்புறப்பாடல்களா?
அடுத்த கட்டுரைதேவதேவன் கடிதம்