யானை டாக்டர் மூலம் என்னை யானையை நோக்கி நகர்த்திய எழுத்தாளர் நீங்கள் உங்களின் வாசகனாக ஒரு கடிதம்
என் வாழ்வில் நான் படித்த மிகப்பெரிய புத்தகங்களில் இரண்டாவது அறம் , முதலாவது திருடன் மணியம்பிள்ளை என் மூலையின் சேமிப்பு சரியென்றால் 783 பக்கங்கள் என்று நினைக்கிறேன் அறம் 399ல் முடிந்து விட்டது.
அறம் முழுக்க மனித முகங்கள் அறம் என்ற இந்த பெயரை யானை டாக்டர் என்ற நூலின் மூலம் தான் பிடித்தேன் , யானை டாக்டர் அறம் புத்தகத்தில் வரும் 12 கதைகளில் ஒன்று .. என் வாழ்வை மாற்றி கதையாக யானை டாக்டர் அமைந்தது , அதனை பின்தொடர்ந்த போது அறம் தானாகவே என் பின்னால் நிழலாடி கொண்டு இருந்ததை இன்று தான் புரிந்து கொண்டேன்.
அறம் 12 கதைகளை கொண்ட ஒரு முழு தொகுப்பு தமிழகத்தின் ஆக சிறந்த எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது எப்படி டாக்டர் கே என் வாழ்வில் அழிக்க முடியாது மனிதராக மாறினாரோ அதே போல இந்த புத்தகம் முழுக்க நிறைய மனிதர்கள் வந்து சேர்ந்தார்கள்.
முதலமானவர் டாக்டர்கே என்றால் இரண்டாமானவர் கோட்டி கதையில் வரும் பூமேடை. இந்த கதாபாத்திரத்தை படிக்க படிக்க பிரபல தமிழ் திரைப்படமான ராஜூ முருகனின் ஜோக்கர் கதாபாத்திரத்தில் வரும் சோமசுந்தரம் கண் முன்னே நின்றார் . அது வேறு கதை இது வேறு கதை என்றாலும் கூட இரண்டு மனிதர்களையும் பிரித்து பார்த்து விடவே முடியாது . பூமேடை நிஜமாகவே மனதில் பூமேடையில் நிற்கிறார்.
மூன்றாவது மனிதர் சோற்றுகணக்கு கதையில் வரும் கெத்தேல்சாகிப் உண்மையாகவே நேற்று இரவு முழுக்க ஒரே சிந்தனை தான் இப்படி ஒரு மனிதர் இருப்பாரா , இன்றைய சூழலில் இப்படி ஒரு உணவகத்தை நடத்த முடியுமா , கெத்தேல் சாகிப் எங்கு இருப்பார் எப்படி இருப்பார் என்ற பல கேள்விகள் என்னை உறங்க விடாமல் செய்தது .. சில நேரங்களில் இவர் என்ன முட்டாளா என்று கூட தோன்றியது .
நான்காவது மனிதர் : உலகம்யாவையும் கதையில் வந்த காரிடேவிஸ் படிக்கும் பொழுதே கூகுல் பண்ண தொடங்கிவிட்டேன் , உலக குடிமகனாக எப்படி பதிவு செய்வது என்றும் , world passport , world service Authority என என் கூகுள் வரலாறு முழுக்க என்னை உலகமயமாக்கல் ஆக்கி கொண்டது தான் மிச்சம் .
ஐந்தாவது மனிதர் ஓலைச்சிலுவை கதையில் வந்த டாக்டர்சாமர்வேல் முதலில் இவர் ஒரு மதம் மாற்றும் நபர் தானே என்று தான் தோன்றியது ஆனால் இவரின் தூய சேவை மனிதம் என்றபோது அந்த பிம்பம் தானாக உடைந்து இவர் மதம் மனிதம் என்ற புரிதலுக்கு உந்தி தள்ளியது .
ஆறாவது மனிதர் வணங்கான் கதையில் வரும் மார்ஷல் நேசமணி இப்பொழுது நான் தட்டச்சு செய்யும் இந்த நொடியில் கூட யானையில் கம்பீரமாய் நடந்து வருகிறார் நேசமணி .குறிப்பாக வணங்கான் கதையில் யானை கையாளப்பட்டு இருக்கும் விதம் என்னை போன்ற யானை காதலர்களுக்கு அடடே ரகம் .
இறுதியாக நாராயண குரு நூறுநாற்காலிகள் முழுக்க நாராயணகுரு , இயற்கை இறை என்றவனை ஒரே கடவுள் , ஒரே மதம் , ஒரே இனம் , ஒரே மனிதன் என்று இந்த உலக எல்லைக்கு உந்த தள்ளி மனிதர் மாமனிதராய் காட்சி அளிக்கிறார்.
படிக்க வேண்டிய புத்தகம் அறம் .. நன்றி எழுத்தாளர் ஜெமோ
ஜெகதீஷ் ரவி