ஈராறு கால்கொண்டெழும் புரவி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

உங்களுடைய ஈராறு கால்கொண்டெழும் புரவி என்ற குறுநாவலை மீள்வாசிப்புக்கு உட்படுத்தினேன். பலரது புரிதலுக்கு வாராத தேடல்கள் அக்கதையில் இடம்பெற்றுள்ளது என்று நினைக்கிறேன். சாத்தான் குட்டிப்பிள்ளை என்பது எவ்வளவு பெரிய தொன்மம் நமக்கான அறிவுப்புலத்தில். ஆனால் ஞானமுத்தன்களும் அய்யாவு நாடாரும் சாதாரணமாகக் காட்டப்பட்டாலும் தமது எல்லைக்குள் நின்றுவிடுகின்றனர். ஆனால் தேடல் பொல்லாதது. அதன் தீவிரம் தூங்க விடாதது என்பதை சாத்தான் குட்டி பிள்ளை மூலம் அறியமுடிகிறது. திருமந்திரம் தொட்டு குகைச்சித்தர் வரையான சித்தர் பாரம்பரியம் நம் ஞானமரபின் மற்றொரு முரணியக்கம் என்று இக்கதைமூலம் அறியவைத்துள்ளீர்கள் ஜெ.
சுயாந்தன்.
இது தொடர்பான என் பார்வை இது.

ஈராறு கால்கொண்டெழும் புரவி

முந்தைய கட்டுரைஇமைக்கணம் – வெண்முரசின் கனி
அடுத்த கட்டுரைகென்யா வாழ்க்கை- வெங்கடேஷ் சீனிவாசகம்