நமது முற்றத்து விண்மீன்கள்

இந்தப்பாடலை அத்தனை மலையாளிகளும் கேட்டிருப்பார்கள், மலையாளத்தில். இதன் தழுவல்வடிவம் மலையாளத்தின் எப்போதைக்கும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று.  https://www.filmyquotes.com/songs/3410 தளத்தில் இதன் வரிகளைப் பார்க்கையில் அழகான கவிதை, வழக்கமான கற்பனாவாதம் என்றாலும் என்று தோன்றியது. ஆனால் மலையாளத்தில் வரிகள் கிட்டத்தட்ட பொருளற்ற வார்த்தைகள்

ஏன் என்று நான் யூகிக்கிறேன். அன்றெல்லாம் மலையாளத்தில் முதலில் பாடலை எழுதிவிட்டு அதற்குத்தான் இசையமைத்திருக்கிறார்கள். இசைக்கேற்ப எழுதும் வழக்கமே இல்லை. 1970 ல் வெளிவந்த ஜீவன்மிருத்யூ என்னும் இந்திப்படத்தை 1971ல் மலையாளத்தில் டப் செய்திருக்கிறார்கள். பாடலை எழுத கவிஞர் திணறிவிட்டார். இவ்வளவுக்கும் எழுதியவர் மலையாளத்தின் மாபெரும் திரைக்கவிஞர் பி.பாஸ்கரன்

முந்தைய கட்டுரைகல்பொருசிறுநுரை
அடுத்த கட்டுரைகாந்தியும் தலித் அரசியலும் -கடிதம்