கதைகள், கடிதங்கள்

ஆகாயம் [சிறுகதை]

ஆகாயம் சிறுகதையை மீள் வாசிப்பு செய்தேன்.

குறைதீர்ந்தக் கல்லில் உருவரைக் குறிப்பெழுதி ஆலயச் சிற்ப உருவங்களை முழுவதுமாக செதுக்கி முடித்த பின்பே அதன் கண்களை வடித்து திறக்கச் செய்து கும்பிட வைப்பது கல் தச்சர்களின் சம்பிரதாயம்.  அதற்கு மாறாக சாத்தப்பன் ஆசாரியின் செவிட்டுமர் மருகனான குமாரன் நேர்த்திமிகு சிற்பங்களை தனது  பிறவியருளினால் வடித்தெடுக்கிறான்.  அதிலும் உருவரைக்கோடேதும் வரையாமலேயே உச்சி முதல் ஒவ்வொரு பகுதியையும் முழுமுடிந்த வகையில் செதுக்கி முடிக்கிறான்.

இவ்விடத்தில் நீங்கள் ஒருமுறை மேற்கத்திய ஓவியகுருமார் ஒருவரால் பாதியில் நிறுத்தி கைவிடப்பட்ட அதுவும் வரைந்த வரையில் முற்றிலும் வர்ணமுழுமையும் பெற்றிருந்த ஓவியத்தை குறிப்பிட்டிருந்ததை நினைத்துக்கொண்டேன்.  அத்தகையதோர்  தியானத்தின் அடர்த்தியும் செறிவும் திகைப்பூட்டியது.  அவ்வாறு தன் அகத்தில் புலனான ஓருருவை உளி வைத்து நேரடியாக பருப்பொருளில் வடித்தெடுத்து காண்பவருக்கு ஆன்ம தரிசனம் அளிக்கச் செய்யும் விக்கிரஹங்களை அனாயாசமாக செய்து முடிக்கும் குமாரன் ஓர் சிற்பக்கலை ஞானியே.  சில வேளைகளில் அவன் மூலம் சிற்ப சாஸ்திரத்திற்குள் அடங்காத விசித்திர சிலைகளும் உருப்பெற்றுவிடுவதுண்டு.  அதற்காக அவன் மனதையும் கைகளையும் கட்டுப்படுத்தி வைக்க முயற்சிக்காது, சாஸ்திரம் வழுவிய அந்த சிற்பங்களையும் அழித்துவிடாது, அவற்றையும் தாந்த்ரீகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வழிபாட்டுக்குரியதாக மாற்றம் செய்வித்து, சபையில் குமாரனின் உயிர் காக்கிறார், வானம் போலே வண்ணம் கொண்டவனின் பெயர் கொண்ட அந்த மிளகுமடிசீலை காரியக்காரர்.

குமாரனது கற்பனையின் எல்லையில்லா ஆகாயத்தில் உதித்து உருப்பெறும் சிற்பங்கள் ஓராயிரம், கருவுறும் வடிவங்களோ நூறாயிரம்.  சீரொருமையற்ற சிற்பங்களும் அந்த ஆகாசத்துக்குரியதே.  எக்கணமும் அதிலிருந்து தெய்வம் எழ வாய்ப்புள்ளது.  யாரரிவார் அவற்றிலிருந்து மேலும் எத்தனை தெய்வங்கள் எழுமென்று.  அவற்றை புரிந்துணர சாஸ்திரத் தர்க்கத்தால் ஒருபோதும் இயலாது.  அது ஒருவகையில் முடிவிலியான வானத்தை அறிந்துகொள்ள முயல்வதே.  எளிய மானுடரால் அவற்றையும் சேர்த்தே வணங்கி வழிபடுவதைத் தவிர செய்யக்கூடியது வேறொன்றுமில்லை.  ஆம், அந்த ஆகாசத்தின் அருளிலாது பூமியில் படைப்பென்பதேது.

நன்றி.

மிக்க அன்புடன்

மணிமாறன்.

அன்புள்ள ஜெக்கு ,

நான் உங்களின் கதைகள் நிறைய படித்துள்ளேன். படித்துள்ளேன் என்பதைவிட கேட்டுள்ளேன். இலக்கிய ஒலி நடத்தும் சே சிவக்குமார் தயவால். ஒருவேளை அவர் பதிவு செய்யாவிடில் உங்களைப்பற்றி தெரியாமலே போயிருக்கும். சீக்கிரம் பொருள் சம்பாதித்து பணக்காரியாக வேண்டும் என்று பொறுமையில்லாமல்  சுற்றித்திரியும் சாதாரண தமிழச்சி நான். வெறும் தன்னம்பிக்கை ஊட்டும் நூல்கள் கட்டுரைகள் மட்டுமே வாசிப்பேன். சுகி சிவம் உரைகள் ,பட்டிமன்றம் கேட்பேன். ஆனந்தவிகடன், குமுதம்,மாலைமதி இவைதான் என் சிறுவயது வாசிப்பு.

வேளாண்மை கல்லூரியில் படித்து சிக்கிரம் சம்பாரிக்க வேண்டும் என்பதற்காக கணினி படித்து அத்துறைக்கு வந்தவள். உங்கள் மனைவி படித்த கல்லூரிதான்.95-99 களில் படித்தவள். அமெரிக்காவில் 15 வருடம் வசிக்கிறேன். சரி என் புராணம் விடுங்கள் . உங்கள் கதைகள் மேல் ஒரு அலாதி பிரியம். என் சோகங்களுக்கு ஒரு வடிகால். என் இறையுணர்விற்கு ஒரு தீனி. இன்றுதான் தேனீ கதை கூட படித்தேன்.அவ்வளவு அற்புதம்.

எனக்கு என்ன கிடைச்சுதுன்னு ஒருத்தன் கணக்கு பாக்க ஆரம்பிச்சா அதோட அவன் கை குறுகிரும். மனசு மூடிரும். அவ்ளவுதான். அதுக்குமேலே குடுக்கமுடியாது. குடுக்காதவன் விரியமாட்டான். விரியாதவனுக்கு மெய்யான சந்தோசம்னு ஒண்ணு இல்லை, என்ன நான் சொல்றது?இந்த வரிகள் அற்புதம்.

உங்களின் பெரியம்மாவின் சொற்கள் கதையை நான் என் நண்பர்களுக்கு சொல்ல நெகிழ்ந்து போனார்கள்.

மேனகா

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைவியாசர்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகுப்பத்துமொழி- கடிதங்கள்