விஷ்ணுபுரம் அஜிதன் முன்வைக்கும் காலச் சக்கர தரிசனத்தை தொடர்ந்து பின் சென்று அதை நான் சிந்திக்கும் சில விஷயங்களுடன் தொடர்பு படுத்திபார்ப்பேன். உதாரணமாக அசோக சக்கரம். மையம் அதிலிருந்து கிளைத்து செல்லும் 24 ஆரக் கால்கள். அவை சென்று முடியும் விளிம்பு வட்டம். இந்த மூன்று அலகையும் மானுட மெய்மை தேட்டத்தின் உதாரண சித்திரமாகவும் கொள்ள முடியும்.