என் தந்தையின் மரணத்திற்குப் பின்பான வெறுமை, பாதுகாப்பின்மை, குற்ற உணர்ச்சி ஆகியவற்றோடு, வீட்டில் முடங்கி இருந்த நாட்களில் வெண்முரசு பற்றி அறிந்து உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். அப்போது முதற்கனல் முடிந்திருந்தது என்று நினைவு, அல்லது சரியாக நினைவில்லை. ஆனால் 2014 முதலேயே நானும் வெண்முரசு வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.