குழந்தைகளுக்கான கதைகள்

அன்பு எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்…!

நான் மதுரையில் வசிக்கிறேன். என் மகன் படிக்கும் பள்ளியின் பெயர் Akshara Matriculation Higher Secondary School. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் உள்ளது. Matriculation பள்ளியாக இருந்தாலும் கூட இது சற்று வித்தியாசமான பள்ளி. 25 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டாலும், விளம்பரம் செய்து மாணவர்களைச் சேர்ப்பதில்லை. LKG யில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 350 தான். பள்ளி மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாணவர்களுக்கு கற்பதில் சுதந்திரம் அளிக்கின்றனர்.

பல தரப்பட்ட பொருளாதாரச் சூழலில் இருந்து குழந்தைகள் வருகிறார்கள். கரோனா காலகட்டத்தில் பள்ளி Online Class நடத்தவில்லை. மிகக் குறைவான அளவில் Worksheet மட்டும் கொடுக்கிறார்கள். கட்டாயக் கட்டண வசூல் செய்யவில்லை. மாறாக, ஆசிரியர்களுக்கு கரோனாக் காலத்திற்கு முந்தைய சம்பளம் வழங்குகின்றனர்.

இந்தப் பள்ளிக்கூடத்தில் Art of Story telling என்ற WhatsApp Group துவக்கி அதில் குழந்தைகளை கதைகளுக்கு அறிமுகப் படுத்துகின்றனர், கதை சொல்லப் பழக்குகின்றனர். சில பெற்றோரிடமும் அதில் பங்குகொள்ளச் சொல்லி இருக்கிறார்கள். சன்னமாக இலக்கியவாசனை என்னிடம் வருவதாக எண்ணி (தவறுதலாக) என்னையும் பங்குகொள்ளச் சொல்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க கிடைத்திருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி பயனுள்ள பங்களிப்பைச் செய்ய விரும்புகிறேன். வெறும் கதைகளாக இல்லாமல்,  Ethics, Values – யை கொடுக்கிற கதைகளைச் சொல்ல விருப்பம். அதே நேரத்தில் பழைய பஞ்சாங்கமாகவும் இல்லாமல் மாணவர்களையும் ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும், அதனால் உங்களை நாடுகிறேன். இம்முயற்சியை எவ்வாறு கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் ஆலோசனை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்களே கூட ஒன்றிரண்டு கதைகளைப் பதிவேற்றி அனுப்பினால் அவர்களுடைய முயற்சிக்கு ஊக்கமாக அமையும். (இது என் ஆசை)

நீங்கள் இந்த முயற்சிக்கு எவ்விதத்திலாவது உதவினால் மிகவும் நன்றாக இருக்கும்.

அன்புடன்,

பிரகாஷ்

9442969918

***

அன்புள்ள பிரகாஷ்

நான் இப்போது கதை சொல்லும் மனநிலையில் இல்லை.

இரண்டு யோசனைகள். ஒன்று கதைகளை பெரியவர்கள் சொல்லி குழந்தைகளுக்கு கேட்கக்கொடுப்பது. இன்னொன்று குழந்தைகளை கதைகளைச் சொல்லவைப்பது.

புகழ்பெற்ற கதைகள் பல உள்ளன. குழந்தைகளுக்கான கதைகள் என்றால் சுந்தர ராமசாமியின் விகாசம், ஸ்டாம்பு ஆல்பம், கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார் போன்ற கதைகளைச் சொல்வேன்

கதைகள் நிகழ்ச்சிகள் கொண்டவையாக இருக்கவேண்டும். தெளிவான தொடக்கமும் முடிவும் கொண்டவையாக இருக்கவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரையூமா வாசுகி- கடிதம்
அடுத்த கட்டுரைஎழுத்தாளனின் பார்வை, கடிதங்கள்