அழகியநம்பியின் ஊர்- புகைப்படங்கள், கடிதங்கள்

அழகியநம்பியின் நகரில்

அழகிய நம்பி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

புகைப்படங்கள் குறித்து திரு.ராமச்சந்திரன் அவர்களின் கடிதம் கண்டேன். நல்ல புகைப்படங்களும் கருவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மிகக் குறைந்த விலையுள்ள செல்போன்களில் மிகச்சிறந்த புகைப்படங்கள் எடுக்கலாம். மொபைலில் மட்டுமே மிகச்சிறந்த புகைப்படங்கள் எடுக்கும்  நிறைய பேர் இன்று உள்ளனர். நண்பர் பிளிஸ்த்து அவர்களில் ஒருவர். இன்றுவரை அவரிடம் ஒரு நல்ல கேமரா கூட இல்லை, அவர் உபயோகிப்பது நீங்கள் வைத்திருப்பதை விட மிக மலிவான மொபைல்.  மாதிரிக்கு சில புகைப்படங்களை இணைத்துள்ளேன்.

மேலும் நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அழகானவை. மொபைலில் அதன் wide-angle lens காரணமாக  இயல்பாகவே அருகில் நின்று எடுக்கப்படும் புகைப்படங்களின் ஓரங்களில் distortion எனப்படும் வளைவு காணப்படும் (நான் எனது ‘விலையுயர்ந்த’ மொபைலில் எடுத்த குறத்தி புகைப்படத்தில் மூத்தவனின் மண்டை சப்பிப்போய்  உள்ளது),  அதே சமையம் நீங்கள் ஜூம் செய்து எடுத்த்தால், சிலைகளின் படங்களில் நேர் நின்று பார்க்கும் சீரான பார்வை உள்ளது. ரதி மீது அற்புதமாக ஒளி விழும் தருணத்தை நீங்கள்தான் காட்டித் தந்தீர்கள்.  சாலையை நீங்கள் எடுத்திருக்கும் புகைப்படத்தில் கூட symmetry  மிகச்சரியாகவே  இருந்தது (கோடுகள் உருவாகும் ஒருங்கு). ஏற்கனவே நீங்கள் எடுத்த புகைப்படத்திற்க்காக  இரண்டு பேர் என்னை அழைத்து ‘புகைப்படங்கள் நன்றாக இருந்ததாக’ பாராட்டினார்கள். புகைப்படங்களில் இருந்தாவது உங்களை ஒதுங்கி இருக்கச் சொல்லுமாறு அருண்மொழி அக்காவிடம் கிண்டலாக சொல்லிக் கொண்டிருந்தேன்.

அன்புடன்,

ஆனந்த் குமார்

புகைப்படங்கள்

[email protected]

பிலீஸ்துவின் facebook இணைப்பு :

அன்புள்ள ஜெ

திருக்குறுங்குடி கட்டுரை அருமையாக உள்ளது. திருக்குறுங்குடி பற்றி நான் எடுத்த சில புகைப்படங்கள் கீழே

காதர் மஸ்தான்

[email protected]

முந்தைய கட்டுரைசிகரங்கள் மட்டுமுள்ள நிலம்
அடுத்த கட்டுரைஇடைக்காட்டூர் முதல் ராமேஸ்வரம் வரை- இரம்யா