பாலும் தெளி தேனும் – இசைக்கோவை

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

நலம். நம் நண்பர்கள் இணையவழி நிகழ்வுகள் நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. படைப்பூக்க மன நிலையிலேயே இருக்கும் நம் நண்பர்களால், சாப்பிட்டோமோ , தூங்கினோமா என்று இருக்க முடியாது என நினைக்கிறேன். இயக்குநர்  மணி ரத்னம் நிகழ்வில் பாடிய நண்பர் விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமாரும், அவரது மகளும் அவ்வையின் பாடலான ‘பாலும் தெளி தேனும்’ பாட, ராஜன் சோமசுந்தரத்தின் இசையில்  ஒரு எளிமையான, அழகான இசைக்கோவை வெளியிட்டுள்ளார்கள்.

இருவரும் எனக்குத் தனித்தனியாக பேசி தொடர்பில் இருப்பவர்கள் என்றாலும், இப்படி ஒரு இனிய இசை அதிர்ச்சி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் !

வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்.

முந்தைய கட்டுரைபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்
அடுத்த கட்டுரைஎலிகள்