நவீனத்தமிழிலக்கிய வாசிப்பு- கடிதம்

மரியாதைக்குரிய ஜெ,

தங்களது புனைவு, புனைவல்லா எழுத்து எனும் கட்டுரையை வாசித்தவுடன் இதை தட்டச்சுகிறேன்.

இதுவரை உங்களுக்கு எழுத வேண்டும் என்ற ஆசையிருந்தும் தயக்கத்தை மீற இயலவில்லை.

நான் தங்களுடைய அறம் தொகுதியின் மூலம் எனது வாசிப்பை ஆரம்பித்தேன், அதிலுள்ள நேரடி கதை சொல்லல் எனக்கு படிப்பதற்கு எளிதாக இருந்தது. அதை தொடர்ந்து தங்கள் புனைவு படைப்புகளை படித்து நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் அக உண்மைகளையும், தரிசனங்களையும் என்னுடைய வாசிப்பின் பொறாமையால் நேரடியாக உணர்ந்து கொள்ள முடியாமல் வாசகர் கடிதங்களுடன் எனது வாசிப்பை ஒப்பிட்டே படைப்பின் பரிமாணங்களை அறிந்து கொள்கிறேன்.

படிமம், குறியீடு போன்றவற்றை என்னால் நேரடியாக உணர்ந்து கதையின் முழுமையை உணர இயலவில்லை.

படிமங்கள், குறியீடுகள் பற்றி விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்…

அன்புடன்

கந்தசாமி

***

அன்புள்ள கந்தசாமி

வாசிக்க வரும் எவருக்கும் இந்தவகையான குழப்பங்கள் உருவாகும். அடிப்படைகளை தெரிந்துகொள்வது என்பது ஒரு சிறிய முயற்சிக்குப் பின் கைகூடுவது. ஆனால் அதற்கான அமைப்புசார்ந்த வசதிகள் இன்றில்லை.

உண்மையில் வாசகர்கடிதங்கள் மிக உதவியானவை. அவை கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு கற்பித்து, உங்கள் பார்வையை துலக்கி தெளிவடையச் செய்கின்றன. சிலகாலம் கழித்து நீங்களே புரிந்துகொள்ள தொடங்கியிருப்பதை காணலாம்

என் தளத்திலேயே வாசிப்பு, படிமம் ஆகியவற்றை பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. அவற்றைப் படிப்பதும் படித்தவற்றுடன் அவற்றை ஒப்பிட்டு யோசிப்பதுமே நல்ல வழி. நான் எழுதிய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் அடிப்படையான எல்லா விஷயங்களும் விளக்கப்பட்டுள்ளன.

ஜெ

மொழி 6,கலைச்சொற்கள் பற்றி…

கலைச்சொற்கள்

இலக்கியக் கலைச்சொற்கள்

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைமழைப்பாடலின் முடிவில்
அடுத்த கட்டுரைகருத்து ஜனநாயகம் – ஒரு விளக்கம்