தவளை,நாகம்,பூனை- கடிதங்கள்

அமுதமும் தீவண்டியும்- கடிதங்கள்

சிலைகள், அமுதம்- கடிதங்கள்

மலைவிளிம்பும் தங்கநூலும்- கடிதங்கள்

கரவு- விமர்சனம்

ஜெ

என்றோ எழுத வேண்டியது, இன்று எழுதுகிறேன். தவளையும் இளவரசனும் கதை பற்றி. படித்து முடித்த உடன், ஒரு தளையிலிருந்து விடுதலை அடைந்தது போல் ஒரு உணர்வு. ஒரு பெண் ஆகிய காரணத்தினால் சமூகத்தைப் பார்த்து என்னுள் ஆழப் பதிந்திருந்த ஒரு கருத்து அல்லது ஒரு வெறுப்பு சட்டென விலகியது. என்னைத் தேடும் என் தேடுதலில் ஒரு முன்னேற்றம் கிடைத்தது. உங்களுடைய கதைகள் உங்கள் வாசகர் ஒவ்வொருவருக்கும் அவர் அவர்க்கான திறப்பை எங்காவது கொடுத்து விடுகின்றன.

ஏழாம் உலகம் படித்த போது அடைந்த உணர்வை அப்போது சொல்லத் தெரியவில்லை, இப்பொழுது சிறிது பிடிபடுகின்றது. வாழ்க்கையின் சரியான அல்லது தேவையான நேரத்தில் ( கீதா முகூர்த்தம் போல) உங்களது எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். பல தத்துவ ஆன்மிக ஞான நூல்களின் அறிமுகம் இங்கே பெற்றுள்ளேன். மிக்க நன்றி

சுபத்ரா

ஜெ

நெடு நாட்களுக்குப் பிறகு கடிதமெழுதுகிறேன். வலைத்தளத்தைப் பெரும்பாலும் வாசித்துவிடுவேன். கடிதமெழுத கொஞ்சம் சோம்பேறித்தனம். ஓர் இலக்கிய வாசகனுக்கு அறவே இருக்கக் கூடாத குணம்.

வாழ்க்கைக்கான பொருளியல் தேடலின் விளைவு, வேலையைத்தவிர வேறெந்த விஷயத்திலும் மனம் லயிக்க முடியாதபடி  சோம்பல்.

டார்த்தீனியம் வாசித்தேன். மனம் இருப்பு கொள்ளவில்லை. இந்த இருண்மையை வாசித்த அடுத்த கணம் மனம் ஆடகம் கதையை நினைக்கச் செய்தது. இரு கதைகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு.

நிறைவான வாழ்க்கையை வாழும் ராஜுவின் அப்பா கருநிறத்தின் மீதிருக்கும் இயல்பான காதலினால் அவர் வாழ்வை மேலும் நிறைவாக்கிக் கொள்ள டார்த்தீனியத்தைக் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், அதன் பின் நடந்ததெல்லாம் சூன்யம். டார்த்தீனியம் கருநாக விஷமாக உரு கொண்டு சகலத்தையும் மரணிக்கச் செய்கிறது. இறுதியில், ராஜு சிந்தனைகளிலும் குருதியிலும் விஷமேறிய நிலையில் வாழும் வேட்கை கொண்டு தப்பி ஓடுகிறான். புது ரத்தம் பாய்ச்சப்பட்டு சிந்தனை தெளிந்து புதிய வாழ்வைத் தொடங்குகிறான். நல்வாழ்வு வாழும் ராஜுவின் அப்பாவிடம் இருண்மையின் குறியீடாக டார்த்தீனியம் (கருநாக விஷம்) வந்துசேர்கிறது.

‘ஆடகம்’ கதையின் நாயகனுக்கோ நிறைய கனவுகள். அத்தனையும் விதவிதமாக சாவதைப் பற்றியது. முடிவாக, வாழ்க்கையை விட்டெறிந்து செல்ல ‘ஆகும்பே’ வருகிறான். ராஜநாகம் தீண்டி, விஷமேறி சாக வேண்டும் என விருப்பம் கொள்கிறான். அவனுக்கோ வாழ்க்கையை ஒளிரச்செய்யும் குறியீடாக ராஜநாகமும் அதன் பொன்னொளி வீசும் விஷமும் வந்துசேர்கிறது.

நாம் வாழ நினைத்தாலும் அதிலிருந்து விலகிச் சென்று வீழ்ச்சி கொள்ள நினைத்தாலும் வேறு சில காரணிகளே அதை நிர்ணயம் செய்கின்றன. அவற்றை இன்னதென்று சொல்லத் தெரியவில்லை!

என்றும் அன்புடன்,
லெனி
கள்ளக்குறிச்சி

அன்புள்ள ஜெ

நான் நூறுகதைகளை அவை வந்தபோதே வாசித்தவள். அன்று ஒருவகை வாசிப்பு. இன்றைக்கு இன்னொருவகை வாசிப்பு. சிலநாட்களுக்கு முன் குடும்பத்திலே ஒரு பிரச்சினை. பேசிக்கொண்டிருந்தபோது நான் “இன்னொருத்தரோட பூனையை நாம புலியாக்கிக் குடுக்கக்கூடாது” என்று சொன்னேன். அது நல்ல பழமொழி என்று எல்லாரும் சொன்னார்கள்

ஆனால் எனக்கே அதன்பிறகுதான் அது பூனை கதையிலுள்ள வரி என்பது ஞாபகம் வந்தது. அந்தக்கதையை வீட்டில் சொன்னேன். ஒரே சிரிப்பு. அதன்பின் யானையில்லா கதையைச் சொன்னேன். “ஒரு ஆனையை மானம் மரியாதையா ஜீவிக்க விடமாட்டீங்களாடே” என்பது என் மகள் அடிக்கடிச் சொல்லும் வரியாக ஆகிவிட்டது.

இந்தகதைகளிலுள்ள easiness. எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் சர்வசாதாரணமாக கோடுகளை இழுத்து மிகச்சிறந்த ஓவியத்தை வரைந்ததுபோல இருக்கின்றன இந்தகதைகள். தமிழில் வாசிக்கக்கிடைக்கும் மிகச்சிறந்த நூறுகதைகளில் நேர்பாதிக்கதைகள் இந்த ஐம்பதில் அடக்கம்

எஸ்.லாவண்யா

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன் பார்வையில்-கடிதம்
அடுத்த கட்டுரைமேடைப்பேச்சின் நெறிகள்