கனவும் கண்ணீரும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நூறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்தக்கதைகளில் உள்ள ஆச்சரியமென்பது நம்முடைய நாட்டுப்புற மரபிலும் பௌராணிக மரபிலும் கொட்டிக்கிடக்கும் படிமங்களைப் பற்றித்தான். எவ்வளவு உருவகங்கள், எவ்வளவு கதைகள். நான் பதிமூன்று ஆண்டுகளாக நவீன இலக்கியம் வாசிப்பவன். தமிழ்க்கதைகள் மேல் மிகப்பெரிய சலிப்பு. என்னவென்றால் எந்தப் புதிய கற்பனையும் கிடையாது. திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான கதைகள். பெரும்பாலும் பாலியல்வரட்சியின் வெளிப்பாடான கதைகள்

ஏனென்றால் கற்பனைக்குத் தேவையான கருவிகள் இவர்களிடமில்லை. கற்பனைக்கு தேவை படிமங்கள்.அந்தப் படிமங்கள் வாழ்க்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் பண்பாட்டிலிருந்தும் வரவேண்டும். இவர்களுக்கு அதிலெல்லாம் பயிற்சியே இல்லை. ஆகவே ஏதாவது கதையை வாசித்து அதையே கொஞ்சம் மாற்றி திரும்பி எழுதிவிடுகிறார்கள். நான் இந்த நூறுகதைகளை வாசிக்கும்போது அடையும் ஆச்சரியமெல்லாம் ஆபகந்தி போன்ற தொன்மங்கள் ஐரோப்பாவிலிருந்தால் எழுதிக்குவித்திருப்பார்களே என்றுதான்

ஆடகம், தங்கத்தின் மணம், ஆகாயம் என்று கதைகளில் நம் மரபு அளிக்கும் படிமங்கள் புத்தம்புதிய வடிவில் வருகின்றன. நினைக்க நினைக்க விரிகின்றன. புலி தங்கமாவதும் சிறுத்தை கொன்றையாவதுமெல்லாம் எவ்வளவு அற்புதமான கற்பனைகள். இலக்கியமென்றாலே இதுதானே. இதை எழுதாமல் என்ன எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஓரக்கண்ணால் பெண்ணைப் பார்ப்பதுதான் இலக்கியம் என்று முடிவே செய்துவிட்டிருக்கிறார்கள். மிகப்பெரிய ஒரு கற்பனைக்குவியல் நமக்கிருக்கிறது. அதன் முனையிலிருந்து தொடங்கினால் பறப்பதற்கு வானமே இருக்கிறது. பறக்கவேண்டுமே.

இந்த நிலைமை எப்படி வந்தது? நம்முடைய மரபிலுள்ள எதையுமே தெரிந்துகொள்ளாத தற்குறிகளாக எப்படி நம் எழுத்தாளர்கள் மாறினார்கள். சரித்திரம் தெரியாது. ஃபோக் தெரியாது. சிற்பமோ புராணமோ தெரியாது. தெரியுமென்று பாவனைசெய்வதெல்லாம் ஐரோப்பிய இலக்கியம். முப்பதாண்டுகளாக ஐரோப்பாவிலிருக்கிறேன். இவர்களுக்கு ஐரோப்பிய இலக்கியமும் தெரியாது என்று எனக்கு தெரியும்.

ஐரோப்பிய அமெரிக்க இலக்கியம் பற்றியெல்லாம் இவர்களுக்கு இருப்பதெல்லாம் ஒரு மேலோட்டமான கற்பனை மட்டும்தான். உண்மையாக ஐரோப்பிய இலக்கியம் படிக்கவேண்டுமென்றால் அதற்கு ஐரோப்பாவின் கலாச்சாரம் வரலாறு மதம் எல்லாம் தெரியவேண்டும். அதைப்பற்றி ஒருவரி எழுதத்தெரியாதவர்கள் என்ன இலக்கியம் படித்திருப்பார்கள்? அது எளிய விசயமும் அல்ல.

சென்ற ஆண்டு ஓர் ஆய்வாளரை பார்த்தேன். போலந்தில் இருந்து கர்நாடகம் போய் ஆராய்ச்சி செய்தார். அவர் சொன்னார் எட்டு ஆண்டுகள் முழுநேரமாக சைவ மதம் பற்றி ஆராய்ந்தார். ஆனால் இந்தியாவுக்கு போனபோதுதான் அவர் அறிந்ததெல்லாம் அவரே கற்பனைசெய்துகொண்டதுதான், உண்மை வேறு என்று தெரிந்தது. கலாச்சாரத்தை அறிந்து இலக்கியம் வாசிப்பது எளிய விசயமே அல்ல.

இதன் விளைவு என்னவென்றால் இந்தியாவைப்பற்றியும் தெரியாது ஐரோப்பா பற்றியும் தெரியாது வெறும் பாவனைகளையே முன்வைக்கமுடியும் என்ற நிலையில் நம் எழுத்தாளர்கள் இருப்பதுதான். நாம் எழுதவேண்டியது நம் காலடியில் புதைந்து கிடக்கிறது. இந்த நூறுகதைகளும் அவ்வளவு சாத்தியக்கூறுகளை காட்டுகின்றன

எஸ். ஸ்ரீனிவாஸ்

அன்பு ஜெ,

இரண்டு வகையான கணக்குகளைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். அது இரண்டு வகையான சமூகத்தை/ மனிதர்களை /குணத்தை என என் மனதில் நீண்டு கொண்டே சென்றது. கணக்கு கதையை முடித்து ஒரு வாரமாகியும் வேறு ஒரு சிறுகதையை ஆரம்பிக்க எனக்கு நேரம் பிடித்தது. கதை என் அம்மாவழி தாத்தா ராமசாமியை ஞாபகப்படுத்தியது. ஒரு வகையில் அவரும் காளியனைப் போன்றவர் தான். அவருக்குத் தெரிந்த கணக்கு என்பது கரும்பும் அதிலிருந்து வரும் வெல்லமும் மட்டுமே. தன் சிறு பிராயத்திலிருந்தே அவர் அறிந்தது வயல்காடும், அதில் விளையும் கரும்பும் மட்டுமே. ஆனால் காலங்காலமாக அவர் ஏமாற்றப்பட்டது அச்சுதன் போன்றவர்களால் தான்.

”கடன் வாங்காமல் ஒரு சம்சாரியால் இங்கு நிலத்ததில் பாடுபட முடியாது” என்று தாத்தா சொல்வார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் கடன் வாங்கிக் கொண்டிருந்தார். வெல்லத்தை கடன் வாங்கியவரிடமே (கடன் வாங்கும்போதே அந்த ஒப்பந்தம் இருக்கும்) இலாபமற்ற விலைக்கு விற்பதும், கடனை அடைப்பதும், திரும்ப கரும்பை இட கடன் வங்குவதுமாகவே இருந்தார். ஓரளவு எனக்கு உலகம் தெரிந்தபின் அந்த ஒரு சுழற்சியை கூர்ந்து ஆராயும்போது தான், அவர் தவறான கணக்குகளை மட்டுமே போட்டு அதில் தலைமுறை தலைமுறையாக வாழந்து வரும் இடைத்தரகரான வெங்கடாசலபதி ராஜா (பெயர் மாற்றியிருக்கிறேன்) ஏமாற்றப்பட்டு வருகிறார் என்பது புரிந்தது. ஒரு முறை அவர் வாங்கி வந்த ஒரு லட்ச ரூபாய் கட்டுகளில் சீராக 1000 ரூபாய் தாள் குறைந்து 90000 மட்டுமே இருந்தது. மிகப் பெரிய தொகையின் விடுபடுதலால் அதிர்ந்து போய் அவரிடம் திருப்பி கேட்க நான் எண்ணிய போது என் தாத்தா தடுத்தார். நான் மேலும் கேட்காமல் என் தந்தையிடம் கூறி அதை கேட்டு வர அனுப்பினேன். அந்த வெ.ராஜாவோ என் தந்தையை ஏறெடுத்தும் பார்க்காமல் அந்த கிருஷ்ணனுக்குத் தெரியும் என்று கூறி அனுப்பிவிட்டார்.

வெகுண்டு பல வழிகளைக் கூறினேன். அதை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான நல்ல பிள்ளைகள் இல்லை அவருக்கு. அவரை சுரண்டுவதையே குறிக்கோளாய் பிள்ளைகள் வைத்திருந்தார்கள் என்பது பின்னர் தான் தெரிந்தது. என்றைக்காவது வேலைக்குப் போய் அவர் கடனையெல்லாம் அடைத்து அவரை உட்கார வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ”காட்டையெல்லாம் விட்டுடு தாத்தா. எங்கூடவே இருந்திடு நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும்” என்று சொல்லும் போதெல்லாம் அவர் மறுப்பார். ”நாங்க விவசாயத்தை விட்டுட்டா நீங்க மண்ண தான் சாப்பிடனும். இந்த மண்ணு தான் என் கருமம். இத நான் அனுபவிச்சே ஆகனும்” னு சொல்லுவார்.

என் இந்த வாழ்க்கையின் மிக முக்கியமான நபர் என் தாத்தா. அவருடன் மட்டுமே நான் அதிகமாகவே பேசியிருக்கிறேன். என்னால் மட்டும் தான் அவருடன் அதிக நேரம் செலவிடமுடியும் என்று என் வீட்டிலுள்ளவர்கள் கேலி செய்வதுண்டு. இந்த ஜூன் மாதம் ஓர் தேய்பிறை நாளில், என் முதல் மாத சம்பளம் வரும் முன்னர் அவர் காலமானார். சாவதற்கு முன்னர் அவர் கூறிய இறுதி வார்த்தைகள் “என்னை ரம்மியாகிட்ட விடுங்கடா. அவ்ளோதான் என் நேரம் நெருங்கிடுச்சு” என்று சொல்லிக்கொண்டே வயலில் நடந்துகொண்டிருக்கும்போதே சரிந்து இறந்துவிட்டார்” என்று என் பாட்டி ஒப்பாரி வைக்கும்போது சொன்னாள். அவள் மேலும் “என் காட்டுப் பளியனே, இந்த சாதில நீ பொறக்கனுமா என் காட்டுப் பளியனே!..” என்றெல்லாம் சொல்லி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று எனக்கு கண்ணீர் வரவே இல்லை ஜெ. என்னை அழச் சொன்னார்கள். அழமுடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தும் கண்ணீர் வரவில்லை. உங்களின் சிறுகதைகளான சிவம், கரு, நிழற்காகம் என அனைத்தும் என்னை வேறொன்றாக மாற்றியிருந்தது. இறப்பென்பதை வேறொன்றாக அது காணச் செய்தது. என்னால் மாற்ற முடியாத ஒன்றை நான் வெறுமே பார்த்துக் கொண்டே இருந்தேன். பின்பொரு பெளர்ணமி இரவில் என் வீட்டு மொட்டை மாடியில் தனித்திருந்தபோது என் தாத்தாவின் இறுதி வரிகளை என்னுள் படர விட்டு நான் அழுது கொண்டே இருந்தேன். “தாத்தா நீ சாந்தியாயிரு. மறுசென்மம்னு ஒன்னு இருந்தா நீ எனக்கு மகனா பொறந்திடு. உன்னை நான் பாத்துகிடறேன்” என்று சொல்லி மட்டுமே அழுது கொண்டிருந்தேன் ஜெ.

இந்த சிறுகதையின் விளிம்பில் காளியன் கண்களில் இருந்து வந்த கண்ணீர் என்பது என் தாத்தாவின் கண்ணீர் தான். தன் வாழ் நாள் தோறும் அவர் கண்ணனை தன் தெய்வமாகத் தொழுது அதிகாலை திருப்பல்லாண்டு சொல்லி ஆறு வயதிலிருந்து அசைவத்தைத் தவிர்த்து தவமாயிருந்து, ஏமாற்றப்பட்டு மட்டுமே இறந்து போனாரோ என்று கண்ணீர் மல்குகிறேன். அந்த வெங்கடாசலபதி ராஜாவை என் வாழ்நாளில் நான் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும். அவன் சாவையும், சந்ததியையும் அவன் கும்பிடும் கடவுள் எப்படி வைத்திருக்கிறது என்று நான் காண வேண்டும்.

எனக்கு உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் ஜெ. கணக்கு செம்பகராமன்களைப் போல ஆட்களை பல துறைகளில் காண முடிகிறது. அவர்களும் நம் கண் முன்னே தான் வாழ்கிறார்கள், புகழ் பெறுகிறார்கள், செல்வம் சேர்க்கிறார்கள் அது ஒரு வகையான ஏமாற்றத்தையும், கொதிப்பையும் எப்பொழுதுமே என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. சில சமயங்களில் “பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற வார்த்தைகள் வழி கூட அவர்களைக் கடக்க இயலாத போது பித்து நிலை உருவாகி என்னை வதைக்கிறது.

அதனாலேயே பலரிடமிருந்து விலகி ஓடுகிறேன். அவர்களை என் உலகில் இல்லாமலாக்குவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இவர்களை நிகழுலகில் எங்ஙனம் கடந்து செல்வது என்பதைப் பற்றி சொல்லுங்களேன்.

பின்னும் ராசிப்பணம்/ ஓட்டைச்சக்கரம், வெள்ளிப்பணம் பணப்பலகை, பாலராமபுரம் வேட்டி, வில்லுவண்டி என ஒரு காலத்தை வரலாறாக கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். எளியவர்களை/ ஏமாற்றத் தெரியாதவர்களை அவர்கள் அறியாது கலங்காலமாக சுரண்டும் வலியவர்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். களியனின் மீட்பு என்பது படிக்கும் மகனிடமிருந்து ஆரம்பமாகலாம் என்ற புனைவை நான் வரைந்து கொண்டே ஜெ. பணப்பலகை என்பது என் வரையில் அச்சுதன் குடும்பம் வரலாற்று ரீதியாக இழைத்து வந்த அநீதிக்கான சின்னமாக என் மனதில் பதிந்து போனது.

அருமையான கதை ஜெ. நன்றி.

அன்புடன்,

இரம்யா.

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகருமுகில் திரள்தல்
அடுத்த கட்டுரைகுறள்- கடிதம்