கதைகளும் கனவும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நூறுகதைகளின் வாசிப்பை நான் இன்னும் முடிக்கவில்லை. கதைகள் வந்துகொண்டிருந்தபோது வாசித்தேன். அதன்பின் ஒவ்வொரு கதையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசிக்க வாசிக்க பெருகும் கதைகள் இவை

இந்தக்கதைகளைப்பற்றி சில எண்ணங்கள் ஏற்பட்டன. நமக்கு தமிழில் கிடைக்கும் கதைகள் இரண்டுவகையானவை. உணர்ச்சிபூர்வமான உள்ளுருக்கும் கதைகள். அறிவார்ந்து ஒன்றை விவாதிக்கும் கதைகள். தி.ஜானகிராமனின் கதைகள் முதல்வகையானவை. சிலிர்ப்பு, பரதேசி வந்தான், கடன் தீர்ந்தது போன்றவை அப்படிப்பட்டவை. சுந்தர ராமசாமி போன்றவர்கள் எழுதியது பெரும்பாலும் அறிவார்ந்த கதைகள். வாழ்வும் வசந்தமும், பல்லக்குதூக்கிகள்  மாதிரி

நவீன இலக்கியத்தில் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் எழுதுவது வாழ்வும் வசந்தமும் பல்லக்குதூக்கிகள்  பமாதிரியான அறிவார்ந்த கதைகளைத்தான். உணர்ச்சிகரமான கதைகள் சிலருக்குப் பிடிக்கும். பொதுவாக நாம் சின்னப்பையனாக வாசிக்க வரும்போது உணர்ச்ச்சிகரமான கதைகளை விரும்பிப் படிப்போம். அதன்பின் நாம் பெரிய வாசகர்களாக ஆகிவிட்டோம் என்று நினைப்பு வந்ததும் அறிவுக்கதைகளை மட்டும் படிப்போம். அதைப்பற்றி நுட்பமாகப் பேச ஆரம்பிப்போம். கொஞ்சநாள் கழித்து வயது முதிர்ந்து வாழ்க்கையையும் கொஞ்சம் பார்க்க ஆரம்பித்ததும் மறுபடியும் உணர்ச்சிகரமான கதைகளுக்கே செல்வோம். அறிவார்ந்த கதைகள் எப்படி உருவாகின்றன என்ற ரகசியம் பிடிகிடைத்துவிடும். வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள்தான் முக்கியம் என்று நினைப்போம்

ஆனால் இந்த நூறுகதைகளில் 90 கதைகள் மேலே சொன்ன இரண்டுவகையிலும் வராதவை. இவை கவிதைபோல படிமங்களை மட்டுமே முன்வைப்பவையாகவும் உருவகக்கதை மாதிரியும் உள்ளன. உணர்ச்சிகரமும் இல்லை, அறிவுத்தர்க்கமும் இல்லை. ஒரு நல்ல கவிதைப்படிமம் முன்வைக்கப்பட்டதும் கதை முடிந்துவிடுகிறது. கதையை வாசித்தபின் அந்தக்கதை நம் கற்பனையில்தான் மேலே வளர்கிறது. கனவில் கதை வந்தபடியே இருக்கிறது. என் கனவில் பலமுறை ஆடகம், மாயப்பொன் ஆகிய கதைகள் வந்துவிட்டன.

இந்தக்கதைகளுக்குச் சரியான உதாரணம், ஆகாயம் என்ற கதை. இவை ஊமையன் கண்டகனவு மாதிரி இருக்கின்றன. இங்கே உள்ள எந்த கதையுடனும் சம்பந்தமே இல்லை. நாம் அறிந்தவற்றை வைத்து அர்த்தம் சொல்லவேமுடியாது.

என்.சம்பத்குமார்

அன்பு ஜெ,

எளிமையான மனிதர்களால் நிரம்பித் ததும்பும் கதை இது. சொல்லப்பட்ட மனிதர்களுக்கு உள்ளொன்று புறமொன்று என்ற வேறுபாடு இல்லை. அப்பாவைத் தவிர அனைத்துக் கதாப்பாத்திரங்களும் ஒரு அளவுக்குமேல் சிந்திப்பதில்லை. எளிமையான மனிதர்களிடம் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. அறிவுள்ளவன் என்று நினைத்துக் கொள்கிறவன் எல்லாவற்றிற்கும் லாஜிக் கேட்டு நகைச்சுவையே கெடுத்து விடுவான். நல்ல வேளையாக அப்படி யாரும் கதையில் இல்லை.

ஒரு சிறு நிகழ்வு தான். பலதரப்பட்ட மனிதர்கள் அதனை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதான ஒன்றைச் சொல்லியிருக்கிறீர்கள். கடுவா மூப்பிள்ளைக்கும், கதையின் பிற மனிதர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். அவர் காடுகளுகானவர். காடேயான யானையின் உள்ளுணர்வையும், காட்டை விட்டுப் பிரிந்து உள்ளுணர்வுகளைத் தொலைத்த மனிதர்களையும் ஒருங்கே புரிந்து வைத்திருப்பவர். கோபாலகிருஷ்ணன் பர்வத ராஜனைப்போல அன்றி ஓரு சிறு குழந்தைக்கான மனோபாவம் கொண்டவனாகத் தெரிந்தான் எனக்கு. ஒரு வேளை கதையின் நிகழ்வினால் வந்த தாக்கத்தால் அப்படி நினைத்திருக்கக் கூடும். யானை மட்டுமல்ல கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் அதே குழந்தை மனோபாவம் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை கதைசோல்லி/ நீங்கள் குழந்தைப்பருவ மனோநிலையில் சொல்லியிருப்பதால் நிகழ்வை இவ்வளவு சுவாரசியமாக்கிவிட்டீர்கள் என்றே நினைத்தேன். சிரித்துக் கொண்டே கதையை முடித்தேன். முடிக்கும் தருவாயில் உங்களின் ஒரு வார்த்தை நினைவிற்கு வந்தது. “யானைக்குள் எப்போதுமே ஒரு காடு இருக்கிறது”. அந்த வார்த்தையைக் கொண்டு கோபாலகிருஷ்ணனைப் பார்த்தேன். கண்ணீரும் கம்பலையுமாக ஒரு தாழைமடலை துதிக்கையில் பற்றி சுருட்டிக் கொண்டிருந்தவன் ராமன் நாயரைக் கண்டு அதை அப்படியே விட்டு விட்டு துதிக்கை தாழ்த்தி் நல்லபிள்ளையாக செவி மடித்தான் என்ற இறுதிச் சித்திரத்தில் என் சிரிப்புத் தருணங்கள் மேலோட்டமான அலையாகவும் அடியாழத்தில் ஒரு சோகமும் படர்ந்தது ஜெ. ஆனையில்லா!

அன்புடன்

இரம்யா.

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைகாந்திக்கான வழிகாட்டிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒரு லட்சம் புத்தகங்கள்