கதையென்னும் வலை- கடிதங்கள்

அன்பு ஜெ,

டீக்கடை என்பது பெரும்பாலும் ஆண்களின் ஒரு உலகம் எனலாம் ஜெ. ஒரு பெண்ணால் கிராமத்து டீக்கடையில் நின்று டீ குடிக்கவோ, உலவவோ முடியாது. அவர்களுக்கான சமூக வெளி குறைவு. அதனால் எனக்கு அந்நியமான ஒரு இடத்தைப் பற்றிய சித்திரத்தை எனக்கு நீங்கள் அளித்திருந்தீர்கள். சுவாரசியமாக இருந்தது எனக்கு.

வருக்கை என்ற வார்த்தை எனக்குப் புதிதாக இருந்தது ஜெ. இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றன தான். இந்தக் கள்ளத் தொடர்புகள் ஒருவாறு அந்த வீட்டிலிருக்கும் நபர்களைத் தவிர ஊரிலிருக்கும் பெரும்பான்மையான நபர்களுக்குத் தெரிந்திருக்கும். தங்கம், கோமதியக்கா போன்றோர் இல்லாத ஊர்களே இல்லை எனலாம் ஜெ. ஊரில் உள்ள பெரியவர்கள் அதை எளிதாகக் கடப்பதை நான் கண்டிருக்கிறேன். காமம்/உடல் சார்ந்த தேவைகளுக்காக நடக்கும் சில விடயங்களை புனிதம் என்ற ஒரு முனையிலோ, கள்ளம் என்ற மறுமுனையிலோ அன்றி மத்தியிலிருந்து பார்க்க கிராமத்தார்கள் பழகிதான் விட்டிருக்கிறார்கள். அதை எளிதாகக் கடப்பதை முன்பெல்லாம் சீரனிக்க முடிந்ததில்லை. அப்போது அது பற்றிய விவரமும் இல்லை. இப்பொழுதெல்லாம் அதை ஒரு நிகழ்வாகவே கடக்கிறேன். எந்தவொரு எண்ணமும் அது சார்ந்து இல்லை. கதையையும் அப்படியே படித்தேன். நகைச்சுவை நிரம்பியதாய், அடியாழத்தில் இச்சை என்னும் மாபெரும் கள்ளமிருகத்தைக் கண்டேன். இரவின் தீவிரத்தில் அது எங்கும் வாழ்கிறது.

வரிக்கச் சக்கைச் சுளைக்க மணம்” 

அன்புடன்

இரம்யா

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நூறு சிறுகதைகளை இப்போதும் படித்துக்கொண்டிருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இது ஒரு மகத்தான வாசிப்பனுபவம். வாசித்து வாசித்து தீராத அனுபவம். நூறு கதைகள், ஒவ்வொன்றும் வேறுவேறு உலகம். ஆனால் ஒன்றிலிருந்து இன்னொன்றாக கதைகள் தொட்டுத்தொட்டுச் செல்கின்றன. ஒரு கதை எழுப்பும் கேள்விக்கு இன்னொரு கதை பதில்கூறுகிறது. அல்லது மேலதிகக் கேள்விகளை உருவாக்கிவிடுகிறது. ஒரு பெரிய உரையாடல் போல கதைகள் என்னைக் கூட்டிக்கொண்டு செல்கின்றன

உதாரணமாக, மூதேவி என்ற கருத்து. மனிதவாழ்க்கையில் தீமை, இருட்டு, மரணம் ஆகியவற்றுக்கு என்ன இடம்? மூத்தோள், அருள், ஆபகந்தி ஆகிய கதைகள் ஒரே கேள்வியை வேறுவேறு கோணங்களில் எழுப்பிக்கொள்பவை. ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வாசிக்கவேண்டியவை. தங்கத்தின் மணம், ஆடகம்,மாயப்பொன் ஆகியவை அதேபோல ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொள்ளும் கதைகள்

ஆச்சரியமான தொடர்பும் உண்டு. அருள் கதையின் இன்னொரு வடிவம்தான் வரம். இரண்டு தலைப்புகளுக்குமே சம்பந்தம் உண்டு. ஒரு கதையின் நேர் எதிரான வடிவம் இன்னொரு கதை.

கதைகளை அப்படி ஒரு பெரிய வலைபோல முடைந்துகொண்டு வாசித்தபடியே இருக்கிறேன். பதினாறு ஆண்டுகளாக இலக்கியவாசகன், தமிழிலக்கியத்தில் ஓரளவு நிறைவூட்டும்படி வாசித்திருக்கிறேன். இந்த நூறுகதைகள்தான் நான் அடைந்த முதன்மையான அனுபவம்

ஜி.ராஜசேகரன்

100. வரம் [சிறுகதை]

99. முதலாமன் [சிறுகதை]

98. அருகே கடல் [சிறுகதை]

97. புழுக்கச்சோறு [சிறுகதை]

96. நெடுந்தூரம் [சிறுகதை]

95. எரிமருள் [சிறுகதை]

94. மலைவிளிம்பில் [சிறுகதை]

93. அமுதம் [சிறுகதை]

92. தீவண்டி [சிறுகதை]

91. பீடம் [சிறுகதை]

90. சிந்தே [சிறுகதை]

89. சாவி [சிறுகதை]

88. கழுமாடன் [சிறுகதை]

87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

86. தூவக்காளி [சிறுகதை]

85. சிறகு [சிறுகதை]

84. வண்ணம் [சிறுகதை]

83. ஆபகந்தி [சிறுகதை]

82. ஆமை [சிறுகதை]

81. கணக்கு [சிறுகதை]

80. சுக்ரர் [சிறுகதை]

79. அருள் [சிறுகதை]

78. ஏழாவது [சிறுகதை]

77. மணிபல்லவம் [சிறுகதை]

76. மூத்தோள் [சிறுகதை]

75. அன்னம் [சிறுகதை]

74. மலையரசி [சிறுகதை]

73. குமிழி [சிறுகதை]

72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

71. செய்தி [சிறுகதை]

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1

69. ஆகாயம் [சிறுகதை]

68. ராஜன் [சிறுகதை]

67. தேனீ [சிறுகதை]

66. முதுநாவல்[சிறுகதை]

65. இணைவு [சிறுகதை]

64. கரு [குறுநாவல்]- பகுதி 1

64. கரு [குறுநாவல்]- பகுதி 2

63. ‘பிறசண்டு’ [சிறுகதை]

62. நிழல்காகம் [சிறுகதை]

61. லாசர் [சிறுகதை]

60. தேவி [சிறுகதை]

59. சிவம் [சிறுகதை]

58. முத்தங்கள் [சிறுகதை]

57. கூடு [சிறுகதை]

56. சீட்டு [சிறுகதை]

55. போழ்வு [சிறுகதை]

54. நஞ்சு [சிறுகதை]

53. பலிக்கல் [சிறுகதை]

52. காக்காய்ப்பொன் [சிறுகதை]

51. லீலை [சிறுகதை]

50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]

49. கரவு [சிறுகதை]

48. நற்றுணை [சிறுகதை]

47. இறைவன் [சிறுகதை]

46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]

45. முதல் ஆறு [சிறுகதை]

44. பிடி [சிறுகதை]

43.. கைமுக்கு [சிறுகதை]

42. உலகெலாம் [சிறுகதை]

41. மாயப்பொன் [சிறுகதை]

40. ஆழி [சிறுகதை]

39. வனவாசம் [சிறுகதை]

38. மதுரம் [சிறுகதை]

37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]

36. வான்நெசவு [சிறுகதை]

35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

33. வான்கீழ் [சிறுகதை]

32. எழுகதிர் [சிறுகதை]

31. நகைமுகன் [சிறுகதை]

30. ஏகம் [சிறுகதை]

29. ஆட்டக்கதை [சிறுகதை]

28. குருவி [சிறுகதை]

27. சூழ்திரு [சிறுகதை]

26. லூப் [சிறுகதை]

25. அனலுக்குமேல் [சிறுகதை]

24. பெயர்நூறான் [சிறுகதை]

23. இடம் [சிறுகதை]

22. சுற்றுகள் [சிறுகதை]

21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

20. வேரில் திகழ்வது [சிறுகதை]

19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]

18. தங்கத்தின் மணம் [சிறுகதை]

17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

16. ஏதேன் [சிறுகதை]

15. மொழி [சிறுகதை]

14. ஆடகம் [சிறுகதை]

13. கோட்டை [சிறுகதை]

12. விலங்கு [சிறுகதை]

11. துளி [சிறுகதை]

10. வேட்டு [சிறுகதை]

9. அங்கி [சிறுகதை]

8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]

7. பூனை [சிறுகதை]

6. வருக்கை [சிறுகதை]

5. “ஆனையில்லா!” [சிறுகதை]

4. யா தேவி! [சிறுகதை]

3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

2. சக்தி ரூபேண! [சிறுகதை]

1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]

முந்தைய கட்டுரைமழைப்பாடலின் வடிவம்
அடுத்த கட்டுரைமுற்போக்கு மிரட்டல்- கடிதங்கள்